ஊரடங்கு: பிறந்தநாளன்று ஏங்கிய சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்த காவல்துறையினர்!

ரோந்து வாகனங்களில் அணிவகுத்து வந்த காவலர்கள் சிறுவனின் வீடு முன்பு நிறுத்தி, பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் பாடியுள்ளனர்.

ஊரடங்கு: பிறந்தநாளன்று ஏங்கிய சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்த காவல்துறையினர்!
பிறந்தநாளன்று ஏங்கிய சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்த காவல்துறையினர்.
  • Share this:
அமெரிக்காவில் கொரோனா அச்சுறுத்தலால் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்ல யாரும் வரவில்லையே என்று ஏங்கிய சிறுவனுக்கு காவல்துறையினர் வாகனங்களில் அணிவகுத்து வந்து வாழ்த்திய சம்பவம் காண்போரை நெகிழ வைத்துள்ளது.

பிறந்த தினத்தன்று சிறுவனின் முகம் வாடியிருப்பதைக் கண்ட தந்தை இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரோந்து வாகனங்களில் அணிவகுத்து வந்த காவலர்கள் சிறுவனின் வீடு முன்பு நிறுத்தி, பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் பாடியுள்ளனர்.

எதிர்பாராத இந்த வாழ்த்தால் சிறுவன் இன்ப அதிர்ச்சியடைந்த காட்சி சமூகவலைத்தளங்களில் பரவிய நிலையில், பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.


Also see:
First published: April 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading