புதுச்சேரியில் அமலுக்கு வந்த ஊரடங்கு தளர்வுகள் - பார்களுக்கு அனுமதி உண்டா?

புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன

புதுச்சேரியில் அமலுக்கு வந்த ஊரடங்கு தளர்வுகள் - பார்களுக்கு அனுமதி உண்டா?
கோப்புப் படம்
  • Share this:
புதுச்சேரியில் அனைத்து விதமான கடைகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருந்தன. தற்போது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், இரவு 8 மணி வரை கடைகளை திறக்க அனுமதி கிடைத்துள்ளது. அமர்ந்து சாப்பிடும் உணவகங்கள், பாலகங்களும் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மதுக்கடைகள் இதற்கு முன்பு காலை 9.30 மணி முதல் மதியம் 2 வரை திறந்திருந்தன. இன்றுமுதல் இரவு 8 மணி வரை உரிய நிபந்தனைகளின்படி திறந்து வைத்திருக்கலாம். பார்களுக்கு அனுமதி இல்லை.



மேலும் படிக்க...

அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் 7 பேருக்கு கொரோனா: கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அறைகள் மூடல்..

இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக தனிநபர் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வெளியே வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் எச்சரித்துள்ளார்.மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் மூடப்பட்ட கடற்கரை சாலை, வரும் 31-ம் தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் ஏற்கெனவே உள்ள விதிகள்படி ஊரடங்கு பின்பற்றப்படுகிறது.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading