அமலுக்கு வந்தது புதிய தளர்வுகள்: ஆகஸ்ட்-31 வரை கட்டுப்பாடுகள் என்னென்ன? இ-பாஸ் நிலை என்ன?

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி கடைகள் திறந்திருக்கும் நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமலுக்கு வந்தது புதிய தளர்வுகள்: ஆகஸ்ட்-31 வரை கட்டுப்பாடுகள் என்னென்ன? இ-பாஸ் நிலை என்ன?
இன்று முதல் புதிய தளர்வுகள்
  • Share this:
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடை வெளியில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப் பட்டு வருகிறது. அத்துடன் நோய்ப் பரவல் தாக்கத்தைப் பொறுத்துத் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

எவற்றுக்கெல்லாம் அனுமதி இந்த புதிய தளர்வில்

1. தொழில் நிறுவனங்கள் இதுவரை 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கியது. ஆனால்  இன்று முதல் 75 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


2. உணவகங்கள், தேநீர் கடைகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்தலாம் .

3. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் பார்சல் உணவுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது,

4. காய்கறி, மளிகை கடைகள் இன்று முதல் காலை 6 முதல் இரவு 7 வரை இயங்கும்,5.பேரூராட்சி, நகராட்சிகளில் பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோயில்கள் பொதுமக்கள் தரிசனத்திற்கான திறக்கப்பட்டுள்ளன.

6. அத்தியாவசிய, அத்தியாவசியமற்ற பொருட்களின் ஆன்லைன் விற்பனை இன்று முதல் வழக்கம் போல் நடைபெறுகிறது.

7. மாநிலங்களுக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் தனியார் மற்றும் பொது போக்குவரத்திற்கு அனுமதி கிடையாது.

8. இதேபோல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போதும், வெளி மாநிலம் செல்லும் போதும் இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயமாகும்.

9.சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கிறது.

10. மெட்ரோ ரயில், மின்சார ரயில், சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை நீடிக்கிறது சேவைக்கான தடையும் தொடர்கிறது.

மேலும் படிக்க...இரும்புத்திரை திரைப்பட பாணியில் கோடிக்கணக்கில் மோசடி.. கொள்ளை நடந்தது எப்படி?

11. சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் பயணிகள் செல்ல அனுமதி கிடையாது.

12. ஆகஸ்ட் 31 வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது.

13. மால்கள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை விடுதிகள், மது கூடங்களை திறக்க அனுமதியில்லை.

14. ஜூலை மாதம் போலவே ஆகஸ்டிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருக்கும்.
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading