Home /News /coronavirus-latest-news /

Lockdown 4: நான்காம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் - பிரதமர் மோடி

Lockdown 4: நான்காம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் - பிரதமர் மோடி

மோடி

மோடி

இந்தியா சுய சார்புடன் இருக்கவேண்டும். கொரோனா வைரஸ் மிக நீண்ட நாள்களுக்கு நம்முடன் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

    மாநில அரசுகளின் ஆலோசனைப்படி கொரோனா பரவலைத் தடுப்பதற்கான நான்காவது கட்டமாக  ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘நாம் வலிமையாக இருக்க வேண்டும். நாம் நம்மை காத்துக் கொள்ளவேண்டும். இதேநேரத்தில் நாம் அடுத்தக்கட்டத்துக்கு நகர வேண்டும். 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானதாக இருக்கும் என்ற குரல்களைக் கேட்க முடிகிறது. ஆனால், இது வெறும் கனவு கிடையாது. இது நம்முடைய கடைமையும் கூட. ஆனால், நாம் எப்படி அந்த இலக்கை அடைவது. தற்போதைய உலக சூழ்நிலை ஒன்றை உறுதியாக காட்டுகிறது. இந்தியா சுய சார்புடன் இருக்கவேண்டும். கொரோனா வைரஸ் மிக நீண்ட நாள்களுக்கு நம்முடன் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

    ஆனால், நம்முடைய வாழ்க்கையை கொரோனா வைரஸை சுற்றியே கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியாது. நாம் முகக் கவசத்தை அணியவேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். ஆனால், நாம் கொரோனா வைரஸ் நம்மைத் தாக்க அனுமதிக்கக் கூடாது. அதனால், நான்காம் கட்ட ஊரடங்கு புதிய விதிகளுடன் புதிய வகைமையில் இருக்கும். மாநில அரசுகளின் ஆலோசனையுடன் ஊரடங்கு 4.0 செயல்படுத்தப்படும். நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து மே 18-ம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:
    Published by:Karthick S
    First published:

    Tags: Lockdown, Modi, PM Modi

    அடுத்த செய்தி