Home /News /coronavirus-latest-news /

தன்னிறைவு இந்தியா திட்டம்: பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படும் - பிரதமர் மோடி

தன்னிறைவு இந்தியா திட்டம்: பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படும் - பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவின் மருந்துகள் புதிய நம்பிக்கையைக் கொண்டுவருகிறது. இந்த நடவடிக்கைகளால் உலகம் முழுவதும் இந்தியா பாரட்டப்படுகிறது. எல்லா இந்தியர்களும் பெருமைப்படுகின்றனர்.

    இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.

    அதில் அவர், ‘இந்தியா தனது கொள்கைகளின் மூலம் உலகத்தை மாற்றியுள்ளது. யோகா என்பது உலகுக்கான இந்தியாவின் பரிசு. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகள் உலக நாடுகளால் பாராட்டப்படுகின்றன. அதன்மூலம், இந்தியாவின் திறமைகள் குறித்து நம்பிக்கை ஏற்படத் தொடங்கியுள்ளது. உலகம் உயிருடனும் மரணத்துடனும் போரிட்டுவருகிறது.

    இந்தியாவின் மருந்துகள் புதிய நம்பிக்கையைக் கொண்டுவருகிறது. இந்த நடவடிக்கைகளால் உலகம் முழுவதும் இந்தியா பாரட்டப்படுகிறது. எல்லா இந்தியர்களும் பெருமைப்படுகின்றனர். பொருளாதாரத்தை மீட்டெடுக்க பொருளாதாரத் திட்டத்துக்காக ஆத்மா நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஒதுக்கப்படும். அதன் மொத்த ஒதுக்கீடு 20 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும்’ என்று தெரிவித்தார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:
    Published by:Karthick S
    First published:

    Tags: CoronaVirus, Lockdown, Modi, Narendra Modi

    அடுத்த செய்தி