திரையரங்கமாக மாறிய விமான நிலையம்… கொரோனா அச்சத்திலும் கூடிய மக்கள்..!

அடுத்த நான்கு வாரங்களுக்கு திரைப்படங்களைத் திரையிட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.

திரையரங்கமாக மாறிய விமான நிலையம்… கொரோனா அச்சத்திலும் கூடிய மக்கள்..!
லித்துவேனியா விமான நிலையம்
  • Share this:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லித்துவேனியா நாட்டில் உள்ள விமான நிலையத்தை திறந்தவெளி திரையரங்கமாக மாற்றியுள்ளனர்.


உலகம் முழுவதிலும் பல நாடுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பயன் இல்லாமல் காலியாக இருக்கும் விமான நிலையத்தை லித்துவேனியாவில் திறந்தவெளி திரையரங்கமாக மாற்றியுள்ளனர். இதற்காக ரசிகர்கள் கார்களில் மட்டுமே வர வேண்டும். எவ்வித காரணத்துக்காகவும் கதவு, ஜன்னல்களைத் திறக்கக் கூடாது என சமூக இடைவெளிக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.


இதை ஏற்று சுமார் 160 கார்கள் திரைப்படத்தைக் காண லித்துவேனியா விமான நிலையத்துக்கு வந்துள்ளன. முதல் படமாக சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்ற தென் கொரிய திரைப்படமானபாரசைட்திரையிடப்பட்டுள்ளது. மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்து தொய்வடையக் கூடாது என்பதற்காக இதனை ஏற்பாடு செய்ததாக ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீருகிறதாம். அடுத்த நான்கு வாரங்களுக்கு திரைப்படங்களைத் திரையிட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.


மேலும் பார்க்க: RE தண்டர்பேர்டு பைக்குக்கு மாற்றாக மீட்டியார் 350... கசிந்த விலை நிலவரம்..!


First published: May 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading