குடிமகன்களின் தற்போதைய நிலை இது தான்... ட்விட்டரில் ட்ரெண்டான #LiquorShops ஹேஸ்டேக் !

ட்விட்டரில் #LiquorShops , #wineshops என்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் இடம் பிடித்துள்ளது.

குடிமகன்களின் தற்போதைய நிலை இது தான்... ட்விட்டரில் ட்ரெண்டான #LiquorShops ஹேஸ்டேக் !
ட்ரெண்டாகும் #LiquorShops ஹேஷ்டேக்
  • Share this:
டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மதுபானக் கடைகளை இன்று முதல் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் மதுக்கடைகளை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் #LiquorShops , #wineshops என்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் இடம் பிடித்துள்ளது. இதில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மது வாங்க வரிசையில் நிற்கும் மது பிரியர்களின் புகைப்படங்களையும், வேடிக்கை வீடியோக்களையும், சில இடங்களில் சமூக இடைவெளி இன்றி மது வாங்க நிற்கும் மது பிரியர்களின் புகைப்படங்களையும், இதில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

 

 
First published: May 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading