மதுக்கடைகள் திறப்பு  விவகாரம்: ஆளுநருடன் அமைச்சர் சந்திப்பு..!

, புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறப்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை என்றும் கடைகளை திறந்தால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட சேர்ந்த மக்கள் அதிக அளவில் வரக்கூடும். இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆளுநர் சுட்டிக்காட்டி மக்களின் நலன் முக்கியம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

, புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறப்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை என்றும் கடைகளை திறந்தால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட சேர்ந்த மக்கள் அதிக அளவில் வரக்கூடும். இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆளுநர் சுட்டிக்காட்டி மக்களின் நலன் முக்கியம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  • Share this:
புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு  விவகாரம் குறித்து ஆளுநரை அமைச்சர்  சந்தித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த மார்ச்சு 23ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன்பிறகு இன்னும் கடைகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு மதுபானங்கள் கடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்கும் விதமாக இரு மாநில போலீசாரும் எல்லைகளில் சோதனையிட்டு மது பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தநிலையில் புதுச்சேரியில் மதுபான கடைகள் 19-ஆம் தேதி  திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக மதுபான கடைகள் திறக்கப்படவில்லை.

மதுபானங்கள் மீது கொரோனா வரிவிதிப்பு தொடர்பான கோப்பு ஆளுநர் மாளிகையில் நிற்கிறது. இந்த நிலையில் கலால் துறை அமைச்சர் நமச்சிவாயத்தை துணைநிலை ஆளுநர் அவசர அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பின் பேரில் ஆளுநர் மாளிகை சென்றுள்ளார் அமைச்சர் நமச்சிவாயம். அங்கு ஆளுநர், நமச்சிவாயம் மற்றும் தலைமைச் செயலர் ஆகியோர் ஒருமணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

45 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம்  பேசிய கலால் துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறப்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை என்றும் கடைகளை திறந்தால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட சேர்ந்த மக்கள் அதிக அளவில் வரக்கூடும். இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆளுநர் சுட்டிக்காட்டி மக்களின் நலன் முக்கியம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் மாநில அரசின் வருவாயை அதிகரிப்பது குறித்தும் அவர் ஆலோசனை கூறியுள்ளார். இது குறித்து முதல் அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மதுபான கடைகள் எப்போது திறக்கும் என்ற கேள்விக்கு திறப்பதில்  காலதாமதம் ஏற்படாது என அமைச்சர் பதிலளித்தார்.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vaijayanthi S
First published: