Home /News /coronavirus-latest-news /

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை தொடக்கம்...!

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை தொடக்கம்...!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஐஆர்சிடிசி இணைய தளத்தில் மட்டுமே இந்த சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மே 12 முதல் சிறப்பு பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு துவங்கும் எனவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

    ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதற்கட்டமாக டெல்லியில் இருந்து சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், செக்கந்தராபாத், மட்கோன, மும்பை, புவனேஸ்வர், அகமதாபாத், ஜம்மு தாவி, ராஞ்சி, பிலாஸ்பூர்,பாட்னா, ஹௌரா, அகர்தலா மற்றும் திப்ருகர் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு இந்த சிறப்புரயில்கள் இயக்கப்படவுள்ளது.

    இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்கும்பயணிகள் முக கவசம் கட்டாயம் அணியவேண்டும். கொரோனா தொற்று உள்ளவர்கள்பயணிக்க முடியாது.

    ஐஆர்சிடிசி இணைய தளத்தில் மட்டுமே இந்த சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு மேற்கொள்ள முடியும். முன்பதிவு செய்தவர்களை தவிர மற்றநபர்கள் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Lockdown

    அடுத்த செய்தி