• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தேனாம்பேட்டையில் 6000-ஐ கடந்த பாதிப்பு: மண்டலவாரியாக சென்னையின் முழு கொரோனா பாதிப்பு அப்டேட்...

தேனாம்பேட்டையில் 6000-ஐ கடந்த பாதிப்பு: மண்டலவாரியாக சென்னையின் முழு கொரோனா பாதிப்பு அப்டேட்...

கோப்புப்படம்.

கோப்புப்படம்.

தேனாம்பேட்டையில் கொரோனா தொற்று பாதிப்பு 6000-ஐ கடந்துள்ளது. அண்ணா நகர் மண்டலத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

  • Share this:
சென்னையில் அன்றாடம் கண்டறியப்படும் தொற்றுகளின் மண்டல வாரியான பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. இதில், ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சையில் இருப்போர், குணமடைந்தோர், உயிரிழந்தோர் எண்ணிக்கையை தனித்தனியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட 53,762 பேரில் 31,858 பேர் குணமடைந்துள்ளனர். 21,094 பேர் சிகிச்சையில் உள்ளனர். 809 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில், அதிகபட்சமாக அண்ணா நகர் மண்டலத்தில் 2,739 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதற்கு அடுத்த தேனாம்பேட்டை மண்டலத்தில் 2,296 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 2153 பேரும், கோடம்பாக்கத்தில் 2137 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

அடையாறு, திருவொற்றியூர் ஆகிய மண்டலங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அங்கு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 50 சதவிகத்திற்கு அதிகமாக உள்ளது.

உயிரிழப்பு சதவிகிதத்தில் திருவெற்றியூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பு சதவிகிதம் 2.17ஆக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திரு.வி.க.நகரில் உயிரிழப்பு 2.04 சதவிகிதமாக உள்ளது.

அதிகபட்ச பாதிப்பு சந்தித்துள்ள ராயபுரத்தில் குணமடைந்தோர் 70 சதவிகிதமாகவும், தண்டையார்பேட்டையில் 67 சதவிகிதமாகவும், திரு.வி.க.நகரில் 63 சதவிகிதமகாவும் உள்ளது.

Also see:

மண்டல  வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:

ராயபுரம் – 7,659
தண்டையார்பேட்டை – 6393
தேனாம்பேட்டை- 6033
அண்ணா நகர் – 5740
கோடம்பாக்கம் – 5578
திரு.வி.க.நகர் – 4,505
அடையாறு – 3,290
வளசரவாக்கம் – 2460
அம்பத்தூர் – 2149
திருவொற்றியூர் – 2,123
மாதவரம் – 1,761
ஆலந்தூர்- 1352
பெருங்குடி- 1166
சோழிங்கநல்லூர்- 1151
மணலி- 920

அதிகபட்சமாக ஒரே நாளில், தேனாம்பேட்டையில் 275 பேருக்கும், அண்ணா நகரில் 234 பேருக்கும், ராயபுரத்தில் 204 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் பெருங்குடியில் 199 பேருக்கும் ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டையில் 172 பேருக்கும், வளசரவாக்கத்தில் 150 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 146 பேருக்கும், திரு.வி.க.நகரில் 118 பேருக்கும், மாதவரத்தில் 106 பேருக்கும், திருவொற்றியூரில் 104 பேருக்கும், அடையாறில் 88 பேருக்கும், மணலி, அம்பத்தூரில் 52 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 50 பேருக்கும், அம்பத்தூரில் 29 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: