corona numbers in India | இந்தியாவில் குறையும் தினசரி பாதிப்பு; அதிகரிக்கும் மரணங்கள்

மாதிரிப்படம்.

மரணம் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 4,329 பேர் பலியாகியுள்ளனர்.

  • Share this:
    கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,63,533 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 2வது நாளாக கொரோனா பாதிப்பு 3 லட்சத்துக்கும் குறைவானது. ஆனால் மரணம் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 4,329 பேர் பலியாகியுள்ளனர்.

    இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ல அறிவிப்பு: ஒரே நாளில் 4,22,436 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

    இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,52,28,996

    கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,63,533

    இதுவரை குணமடைந்தோர்: 2,15,96,512

    கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 4,22,436

    கொரோனா உயிரிழப்புகள்: 2,78,719

    கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள்: 4,329

    சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 33,53,765

    இதுவரை 18,44,53,149 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

    மே மாதம் 11ம் தேதி முதல் ஒரு வாரத்தில் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 32,000 பேர் பலியாகியுள்ளனர். ஏப்ரல் 28 முதல் தினப்படி 3,000த்துக்கும் அதிகமாக மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    இந்தியாவில் ஜூலை மாதத்தில் 51 கோடி வாக்சின்கள் கைவசம் இருக்கும் என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். உற்பத்தியை பெருக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பிளாஸ்மா சிகிச்சையினால் பலனில்லை என்று கோவிட்-19 சிகிச்சைகள் பட்டியலிலிருந்து பிளாஸ்மா சிகிச்சை நீக்கப்பட்டுள்ளது.

    இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தரவுகளின் படி இந்தியா முழுதும் 1000 டாக்டர்கள் கொரொனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மருத்துவப் பணியாளர்களில் 66% பேருக்குத்தான் இதுவரை கொரோனா வாக்சின் போடப்பட்டுள்ளது.

    ஒருநாள் இறப்பு விகிதத்தில் மகாராஷ்டிரா மீண்டும் முதலிடம் வகிக்கிறது, கடந்த 24 மணி நேரத்தில் 1000 பேர் கோவிட்டுக்கு பலியாக மொத்த இறப்பு எண்ணிக்கை அங்கு 82,486 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 335 பேர் பலியாக மொத்த பலி எண்ணிக்கை 18,005 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிராவுக்கு அடுத்த படியாக கர்நாடகாவில் ஒரே நாளில் 476 பேர் பலியாகியுள்ளனர், மொத்த இறப்பு எண்ணிக்கை 22,313.

    கேரளாவில் ஒரே நாளில் 87 பேர் பலியாக மொத்த பலி எண்ணிக்கை 6,515 ஆக அதிகரித்துள்ளது.
    Published by:Muthukumar
    First published: