கொரோனா அச்சமின்றி காசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

காசிமேடு மீன் சந்தை

சென்னையில் கொரோனா அதிகரித்து வரும் சூழலில் காசிமேட்டில் தனிநபர் இடைவெளியின்றி மக்கள் ஏராளமானோர் மீன்வாங்க குவிந்ததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. இதுவரையில் இல்லாத புதிய உச்சமாக ஒரு நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.30 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது. கொரோனா முதல் அலையில் பாதிக்கப்படாத பலரும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

  சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர், அமீர் கான், ஆலியா பட், ரன்வீர் கபூர் உள்ளிட்ட இந்தி திரைப்பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதேபோல, தமிழ், மலையாளம், தெலுகு திரைப்படங்களில் முன்னணி நடிகையாகத் திகழும் நிவேதா தாமஸும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, சுந்தர் சி, பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 6,000-த்தை எட்டியுள்ளது.

  கொரோனா முதல் அலையின்போது காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால் சிறிதுகாலம் காசிமேட்டில் மீன்விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே பலரும் தனிநபர் இடைவெளியின்றி மீன்வாங்க குவிந்தனர்.

  அதில் சிலர் முகக்கவசம் கூட அணியாமலும் நின்றனர். அவர்களை போலீசார் ஒலிபெருக்கி மூலம் முக்கவசம் அணியும்படி எச்சரித்தனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டமாக சென்று மீன்வாங்கினர். மீன்பிடித் தடைக்காலமும் விரைவில் வர உள்ளதால் மொத்த விற்பனையாளர்களும் அங்கே குவிந்தனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: