கொரோனா பெருந்தொற்று காலத்திலும், ராஜிவ்காந்தி மருத்துவமனையின் செயல்பாடுகள், தமிழக அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மிக முக்கிய அங்கமாக உள்ளன.
தற்போது கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில், மக்கள் மீண்டும் முன்னெரிக்கையோடு செயல்பட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கான நவீன கருவிகளை வழங்குவதற்கு குர்காவ்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லால் பாத்லேப் அறக்கட்டளை முன்வந்துள்ளது.
இந்த லால் பாத்லேப் நிறுவனம், இந்தியா முழுவதும் பரிசோதனை மையங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த மையங்கள் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கான பரிசோதனைகளை அளித்து வருகின்றன. லால் பாத்லேப் அறக்கட்டளை,
சென்னையைச் சேர்ந்த RMD வலி மற்றும் நோய்த் தடுப்பு சிகிச்சை அறக்கட்டளை மூலம் இந்த கருவிகளை அளிக்கிறது. RMD வலி மற்றும் நோய்த் தடுப்பு சிகிச்சை அறக்கட்டளை சென்னையை தலைமையிடமாகக் கொண்டு சுமார் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இன்று அளிக்கப்பட்ட கருவிகளின் மதிப்பு சுமார் 17 லட்சம் ரூபாயாகும்.
மேலும் படிக்க...
இணைநோய் இல்லாதவர்களும் கொரோனா தடுப்பூசி கட்டாயம்: மத்திய அமைச்சர் ஜவடேகர்
இந்த நிகழ்வில், லால் பாத்லேப் நிறுவனத்தின் சார்பில், திரு.வரதராஜன் வேணு, டாக்டர்.சரண்யா மோகன் ஆகியோரும், RMD வலி மற்றும்
நோய்த் தடுப்பு சிகிச்சை அறக்கட்டளையின் சார்பில் டாக்டர் ரிபப்ளிக்கா ஶ்ரீதர், ராஜேஸ்பாபு, இம்மானுவேல், ஜோஸ்பின் ஜேசுராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு கருவிகளை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தலைவர் திரு . மருத்துவர் தீரனிராஜன் அவர்களிடம் வழங்கினார்.

கொரோனா சிகிச்சை பிரிவுக்கு நவீன கருவிகள் வழங்கிய லால் பாத்லேப் அறக்கட்டளை
நிகழ்வில் பேசிய திரு . மருத்துவர் தீரனிராஜன் அவர்கள், மருத்துவமனைகளுக்கான நவீன கருவிகளின் தேவை அதிகமாக உள்ளது. லால் பாத் லேப் நிறுவனம் போன்றவர்களால் அது நிறைவேறுவது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். மேலும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்பதையும் திரு. தீரனிராஜன் வலியுறுத்தினார்.
கொரோனா தடுப்பூசிகளால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது என்றும், கொரோனா தடுப்பூசிக்கு பிறகு, 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரையிலான காய்ச்சல்கள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் திரு. தீரனிராஜன் கூறினார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்