Oxygen shortage in India | நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை வழங்க எல்&டி நிறுவனம் முடிவு

மாதிரிப்படம்.

கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாகிவரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் சவாலாக உருவெடுத்துவருகிறது. இந்நிலையில், முன்னணி உட்கட்டமைப்பு நிறுவனமான எல் அண்ட்டி ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய 22 ஜெனரேட்டர்களை மருத்துவமனைகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

  • Share this:
    இந்த ஜெனரேட்டர்கள் காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்துமருத்துவமனையில் குழாய்கள் வழியாக நோய் பிரிவு அறைகளுக்குக் கொண்டு செல்லும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக எல் அண்ட் டி நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து எல் அண்ட் டி நிறுவன சிஇஓ எஸ்.என்.சுப்ரமண்யம் கூறும்போது, “முற்றிலும் எதிர்பாராத நெருக்கடி நிலையில் இருக்கிறோம்.

    ஆக்சிஜன் பற்றாக்குறையினால் ஏற்படுகிற உயிரிழப்புகளைப் பார்க்கையில் மிகுந்த வலி உண்டாகிறது. எனவே எல் அண்ட் டி நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தி ஜெனரேட்டர்களை உருவாக்கும் முயற்சியிலும், ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்புக்கான உபகரணங்களைத் தயார் செய்வதிலும் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு 22 ஆக்சிஜன் ஜெனரேட்டர் யூனிட்டுகள் வழங்க திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

    முதல்கட்டமாக 9 ஜெனரெட்டர்கள் மே 9-ம் தேதி இந்தியா வந்து சேரும் என்றும், மே 15-க்குப் பிறகு ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளுக்கு இவை தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும் எல் அண்ட் டி நிறுவனம் கூறியுள்ளது.

    நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிர்கல் மரித்துப் போவது இனப்படுகொலைக்குச் சமம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் சாடியுள்ளது, மேலும் இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

    கர்நாடகாவில் ஞாயிறன்று ஒரே மருத்துவமனையில் 24 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் மரணித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சனிக்கிழ்மையனறு 12 பேர் ஆக்சிஜன் இல்லாமல் மருத்துவமனையில் பலியாக நேரிட்டது.

    வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள பொருட்களை கையாளுவதற்காக விமான நிலையத்தில் 3,500 சதுர மீட்டர் பரப்பளவை ‘ஜீவோதய் கிடங்கு’ என்ற பெயரில் ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டு வரப்பட்ட பொருட்களில் 5,500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், சுமார் 3,200 சிலிண்டர்கள், 9.28 லட்சம் முககவசங்கள், 1.36 லட்சம் ரெம்டெசிவிர் ஊசிமருந்துகள் ஆகியவை உள்ளன.

    இந்த பொருட்கள் பெரும்பாலும் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, ஐக்கிய அமீரகம், உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து, கத்தார், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    வெளி நாடுகளிலிருந்து ஏகப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட உதவிகள் வந்தவண்ணம் இருந்தாலும் அவற்றை சரியாக விநியோகம் செய்ய முடியாமல் தேங்கிக் கிடப்பதாக வந்த செய்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது, ஆனால் குஜராத், உ.பி., மத்தியப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிவாரணம் சென்றுள்ளதாகவும் மற்றபடி ராஜஸ்தான், ஜார்கண்ட், கேரளா, சத்திஸ்கர், பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு நிவாரணப்பொருட்கள் உரிய வகையில் போய்ச்சேர்வதில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன.

    இந்நிலையில் காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்துமருத்துவமனையில் குழாய்கள் வழியாக நோய் பிரிவு அறைகளுக்குக் கொண்டு செல்லும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை எல்&டி நிறுவனம் வழங்க முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
    Published by:Muthukumar
    First published: