கொரோனா வைரஸ் அச்சம்: அரபு நாடுகளில் உஷார்நிலை.. விமானம், கப்பல் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு

13 கடத்தல் குருவிகள் மற்றும் மூன்று சுங்கத்துறை அதிகாரிகள் என 16 நபர்களுக்கு மார்ச் மாதம் ஆறாம் தேதி வரை நீதிமன்றக் காவல்.

கொரோனா வைரஸ் அச்சம்: அரபு நாடுகளில் உஷார்நிலை.. விமானம், கப்பல் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு
மாதிரிப்படம்
  • Share this:
கொரோனா வைரஸ் காரணமாக, ஈரானிய கப்பல் மற்றும் விமானங்களுக்கு அண்டை நாடுகள் தடைவிதித்துள்ளன. அதேபோல் மற்ற அரபு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 2600 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் தங்கள் நாடுகளிலும் பரவாமல் இருக்க உலக நாடுகள் அனைத்தும் எச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இதனிடையே, ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில், ஈரான் நாட்டின் கப்பல்களை தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் நுழைய குவைத் நாடு தடை விதித்துள்ளது. அதேசமயம், ஈரான் நாட்டுக்கான விமான சேவையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுத்தியுள்ளது.

மேலும், தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், இத்தாலி, சிங்கப்பூர் நாடுகளில் இருந்து பயணிகள் நுழைய ஈராக் தடைவிதித்துள்ளது.

சவூதி, பஹ்ரைன், ஓமன் உள்ளிட்ட நாடுகள் விமான சேவையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
First published: February 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading