• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தொடங்கியது குற்றால சீசன்... சோகத்தில் வியாபாரிகள், சுற்றுலா பயணிகள்

தொடங்கியது குற்றால சீசன்... சோகத்தில் வியாபாரிகள், சுற்றுலா பயணிகள்

  • Share this:
ஓங்கி உயர்ந்து நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலைகள், இவை அனைத்தையும் பசுமை போர்த்திய செடி கொடிகள், மரங்கள், இதமான தென்றல் காற்று, அவ்வப்போது பொழியும் சாரல் மழை, ஐந்தருவி, பிரதான அருவி, பழைய குற்றால அருவி என ஒன்பது அருவிகள் இவைதான் குற்றாலம்.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்காசிக்கு 100 கோடி ரூபாய் வருவாயை அள்ளித்தரும் குற்றால சீசன் கொரோனா பரவல் காரணமாக களையிழந்துள்ளது. குற்றாலத்தில் ஐந்தருவி, பழைய குற்றால அருவி, பிரதான அருவி, புலியருவி, சிற்றருவி, என ஒன்பது அருவிகள் உள்ளது.



ஆண்டுதோறும் ஜூன் முதல் மூன்று மாதங்கள் சீசன் உள்ள நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி தீவிரமடைந்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்ட துவங்கியுள்ளது. மலைகளில் பலதரப்பட்ட மூலிகைகளை கடந்து அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் இதற்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் துவங்கியுள்ளது. ஆண்டிற்கு 50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில் இந்த ஆண்டு கொரானா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. அருவிக்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. குற்றால சீசனை அனுபவிக்க முடியாததால் சுற்றுலா பயணிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.



சீசனை நம்பி குற்றாலம் காசிமேஜர்புரம் தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சீசன் காலங்களில் தற்காலிக கடைகள், நர்சரி கார்டன், டீக் கடைகள், பழக்கடைகள் என பல்வேறு கடைகளை நடத்தி ஒரு ஆண்டிற்கான வருமானத்தையும் இந்த மூன்று மாதங்களில் மட்டுமே பெரும் நிலையில் உள்ளனர். 800-க்கும் மேற்பட்ட விடுதிகள் ஆள் அரவமின்றி காட்சியளிக்கிறது.

சுற்றுலா தடை தொடர்வதால் குற்றாலம் பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் குற்றால சீசனை சுற்றுலாப்பயணிகள் அனுபவிக்க முடியாமல் செய்ததோடு நூறு கோடி ரூபாய் அளவில் பல்வேறு தரப்பினருக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.



குற்றாலம் போன்ற சுற்றுலா தலங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது நோய்த்தொற்று பரவாமல் தடுப்பது என்பது இயலாத காரியம். இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் இந்த ஆண்டு சீசன் களை கட்டினாலும் வியாபாரிகள் சுற்றுலா பயணிகளுக்கு இந்த சீசன் கலையிழந்த சீசனாகவே உள்ளது.

 






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: