கோவேக்சின் தடுப்பூசி தொடர்பாக வெளிப்படையான தரவு இல்லையா? பயோடெக் நிறுவனம் விளக்கம்
கோவேக்சின் தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை 24 ஆயிரம் தன்னார்வலர்களை கொண்டு நடந்து வருகிறது.

கோவேக்சின்
- News18 Tamil
- Last Updated: January 5, 2021, 6:26 AM IST
கோவேக்சின் தடுப்பூசி பற்றி வெளிப்படையான தரவு இல்லை என்று சொல்லப்படும் நிலையில், அது குறித்து பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான கிருஷ்ணா எல்லா விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து கிருஷ்ணா எல்லா கூறுகையில், 4 நகரங்களில் கோவேக்சின் தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படும். ஹைதராபாத்தில் மட்டும் ஆண்டுக்கு 20 கோடி டோசும், மற்ற நகரங்களல் 50 கோடி டோசும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவேக்சின் தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை 24 ஆயிரம் தன்னார்வலர்களை கொண்டு நடந்து வருகிறது. கோவேக்சின் தடுப்பூசி தொடர்பாக வெளிப்படையான தரவு இல்லை என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு இணையத்தில் உள்ள கோவேக்சின் தொடர்பான கட்டுரை படிப்பதற்கு பொறுமை தேவை என நான் கருதுகிறேன். இந்திய நிறுவனங்கள் தரம்குறைந்தவை என குறிவைக்கப்படுகின்றன. எங்களது நிறுவனத்தின் பணி பைசர் நிறுவனத்தை காட்டிலும் குறைவானது அல்ல என்று கூறினார்.
ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை அவரசகால பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கிருஷ்ணா எல்லா கூறுகையில், 4 நகரங்களில் கோவேக்சின் தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படும். ஹைதராபாத்தில் மட்டும் ஆண்டுக்கு 20 கோடி டோசும், மற்ற நகரங்களல் 50 கோடி டோசும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவேக்சின் தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை 24 ஆயிரம் தன்னார்வலர்களை கொண்டு நடந்து வருகிறது. கோவேக்சின் தடுப்பூசி தொடர்பாக வெளிப்படையான தரவு இல்லை என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு இணையத்தில் உள்ள கோவேக்சின் தொடர்பான கட்டுரை படிப்பதற்கு பொறுமை தேவை என நான் கருதுகிறேன்.