Home /News /coronavirus-latest-news /

விவசாயிகள், வியாபாரிகளின் தொடர் கோரிக்கை: மீண்டும் திறக்கப்படுமா சென்னை கோயம்பேடு சந்தை?

விவசாயிகள், வியாபாரிகளின் தொடர் கோரிக்கை: மீண்டும் திறக்கப்படுமா சென்னை கோயம்பேடு சந்தை?

கோயம்பேடு மார்கெட். (கோப்புப் படம்)

கோயம்பேடு மார்கெட். (கோப்புப் படம்)

கோயம்பேடு சந்தை இழுத்து மூடப்பட்டு இன்றோடு 77 நாட்கள் ஆகின்றன. சந்தை மீண்டும் திறக்கப்படுமா இல்லையா என்ற சந்தேகம் வியாபாரிகள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. எப்போது திறக்கப்படும் வியாபாரிகளின் வாழ்க்கை கதவும்,சந்தையின் வாசற்கதவும்???அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

மேலும் படிக்கவும் ...
சென்னையில் கொரோனா தொற்றுக்கு பெரும் காரணமாக இருந்தது என்று சொல்லி அதிரடியாக இழுத்து மூடப்பட்டது ஆசியாவின் மிகப் பெரிய சந்தையான கோயம்பேடு சந்தை. இன்றோடு 76 நாட்கள் ஆகியும் சந்தை இன்னமும் திறக்கப்படவில்லை. திருமழிசையில் புதிய சந்தை செயல்பட்டு வருகிறது. அதில் 200 கடைகள் மொத்த வியாபாரம் செய்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு தொலைவில் என்று குறிப்பிடும் அளவுக்கு இருக்கும் திருமழிசைக்கு சென்று காய்கறி வாங்கி வருவது வியாபாரம் செய்வது பலருக்கும் சிரமமான விஷயமாக மாறிப்போனது. இதனால் தேங்கி கிடக்கும் காய்கறிகள் பழங்கள் குப்பைக்கு சென்று சேர்கின்றன.

கோயம்பேடு சந்தையை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தி மீண்டும் திறப்பதில் அரசு சுணக்கம் காட்டி வருவதாகவும், மீண்டும் சந்தையை திறப்பதில் தயக்கம் இருப்பதாகவும் (நிரந்தரமாக மூடல்) குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஓரிடத்தில் நான்கு மணி நேரத்திற்குமேல் வைரஸ் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு வீட்டில் தொற்று ஏற்பட்டால் வீட்டை சுத்தப்படுத்தி அங்கேயே வாழ்வதுதான் வழக்கம்.நோய் வந்துவிட்டது என்பதற்காக யாரும் வீட்டை காலி செய்வதில்லை. அதேபோன்று சுத்தப்படுத்தி கோயம்பேட்டை திறக்க தாமதிப்பது ஏன் என்கிறார் எழுத்தாளர் சாவித்திரி கண்ணன்.

தற்போது பெரும்பாலான வியாபாரிகள் திருமழிசைக்கு வராமல் வேறு தொழிலுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுவரையில் 3,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார்.

அரசு என்ன நிபந்தனைகள் அறிவுரைகள் சொன்னாலும் அதை கடைபிடிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் உடனே கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என்பதும் வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

இத்தனை இழப்பும் வெறுமனே வியாபாரிகளுக்கு மட்டுமல்ல, அதை விளைவிக்கும் விவசாயிகளுக்கும் தான். கஷ்டப்பட்டு விளைவித்து சந்தைக்கு வரும் காய்கறிகள் குப்பைக்கு செல்வதால் விவசாயமே அழிந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நேரடியாக வந்து காய்கறிகளை வாங்காமல் மொத்த வியாபாரத்திற்கு மட்டும் அனுமதி அளித்து டோக்கன் முறையில் வந்து செல்வதற்கு வழிவகை செய்தால் நல்லது என்கிறார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா.

மேலும் படிக்க...

சென்னை தளர்வுகளுக்கு தயார் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

நாட்டாமை பட பாணியில் கோவில் பிரச்சினையால் தள்ளிவைக்கப்பட்ட 3 குடும்பங்கள்.. நடந்தது என்ன?

அடுத்த மாதம் கோயம்பேடு சந்தை திறக்கப்படும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை அதிகாரிகள் விரைந்து முடித்தால் மட்டுமே வியாபாரிகளுக்கு நன்மை கிடைக்கும். 77 நாட்கள் ஓடிவிட்டன. ஒவ்வொரு நாளும் திருமழிசைக்கு ஓடி ஓடிச் சென்று காய்கறி பழங்கள் வாங்குவது சாத்தியமில்லை. அரசு கோயம்பேடு சந்தையின் வாசல் கதவுகளை விரைவில் திறந்தால் மட்டுமே வாடிய பயிரையும்,வயிறையும் காப்பாற்ற முடியும் என்று வியாபாரிகள் தங்கள் வேதனையை தெரிவிக்கின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus, Koyambedu

அடுத்த செய்தி