கோயம்பேடு சந்தை சில்லறை வியாபாரம்: இன்று முதல் சுழற்சி முறையில் இயங்கும்....

கோயம்பேடு சந்தை சில்லறை வியாபாரம்: இன்று முதல் சுழற்சி முறையில் இயங்கும்....

கோயம்பேடு மார்க்கெட் - கோப்புப்,படம்

கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று முதல் சுழற்சிமுறையில் கடைகள் திறக்கப்படுகின்றன.

 • Share this:
  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை விற்பனை கடைகள் ஏப்ரல் 10-ம்தேதி முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக தமிழக அரசு கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பேடு சந்தை சில்லறை வியாபாரிகள், சந்தைக்குள் சில்லறை விற்பனையை அனுமதிக்க வலியுறுத்தி, சந்தை நிர்வாக அலுவலகத்தை கடந்த வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். அப்போது, சில்லறை விற்பனை கடைகளை முழுவதுமாக மூடுவதற்கு பதிலாக 50 சதவீத கடைகளை சுழற்சி முறையில் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று சில்லறை வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இவர்களின் கோரிக்கை சிஎம்டிஏ உறுப்பினர் செயலருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

  அதன்படி, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று முதல் சுழற்சிமுறையில் கடைகள் திறக்கப்படுகின்றன. மொத்தமுள்ள 1,800 கடைகளில், ஒற்றைப்படை எண் கொண்ட 900 கடைகள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் திறக்கப்பட உள்ளது. இதேபோல், இரட்டைப்படை எண்களை கொண்ட கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க... வேகமெடுக்கும் கொரோனா: ரெம்டெசிவர் மருந்தை ஏற்றுமதி செய்ய தடை...  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: