கோயம்பேடு மார்க்கெட் கொரோனா தொற்று பரவலில் இருந்து தப்பித்த 11 மாவட்டங்கள்..!

Corona Virus | Koyambedu Market | சென்னையில் அதிகபட்சமாக 735 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் கொரோனா தொற்று பரவலில் இருந்து தப்பித்த 11 மாவட்டங்கள்..!
கோயம்பேடு மார்கெட். (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: May 10, 2020, 7:35 AM IST
  • Share this:
தமிழ்நாட்டில் இது வரை 26 மாவட்டங்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. 11 மாவட்டங்கள் பாதிக்கப்படவில்லை.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6535-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 852 பேர் கோயம்பேடு சந்தையிலிருந்து நேரடியாக தொற்று பெற்றவர்கள். அவர்களிடமிருந்து 1015 பேருக்கு தொற்று பரவியுள்ளது.

இதில்  சென்னையில் அதிகபட்சமாக 735 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேருக்கு மட்டுமே நேரடியாக தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து 732 பேருக்கு தொற்று பரவியுள்ளது.


அடுத்து கடலூரில் 317 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைவருமே கோயம்பேட்டிலிருந்து கடலூருக்கு வந்தவர்கள்.  அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 239 பேரில் 196 பேர் கோயம்பேட்டிலிருந்து வந்தவர்கள், 43 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள்.

இந்த பட்டியலில் அடுத்து விழுப்புரத்தில் 177 பேர், திருவள்ளூரில் 124 பேர், பெரம்பலூரில் 59 பேர், கள்ளக்குறிச்சியில் 45 பேர், செங்கல்பட்டில் 39 பேர், காஞ்சிபுரத்தில் 33 பேர், திண்டுக்கல்லில் 24 பேர், திருவண்ணாமலையில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சியில் 10 பேர், தஞ்சாவூரில் 8 பேர், வேலூரில் 6 பேர், திருநெல்வேலி, திருப்பத்தூரில் தலா 5 பேர், நீலகிரி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டையில் தலா 4 பேர், தேனி, தருமபுரியில் தலா 3 பேர், திருப்பூரில் 2 பேர், தூத்துக்குடி, திருவாரூர், தென்காசி, கரூரில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோயம்பேடு மார்க்கெட் மூலமாக பாதிக்கப்படாத மாவட்டங்கள் கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல்,  ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்கள் உள்ளன.First published: May 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading