கோவில்பட்டி கிளைச்சிறையில் மேலும் ஒரு கைதிக்கு உடல்நலக்குறைவு
கோவில்பட்டி கிளைச் சிறையில் மேலும் ஒரு கைதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்புப் படம்
- News18 Tamil
- Last Updated: July 12, 2020, 9:22 PM IST
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடிதடி வழக்கு தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி (57) என்பவர் விசாரணைக் கைதியாக உள்ளார். அவருக்கு இன்று மதியம் தீடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிறைக்காவலர்கள் இருசக்கர வாகனத்தில் தெட்சிணாமூர்த்தியை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அழைத்துச் சென்றனர். அங்கு கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டு இருந்ததால், சிறிது நேரம் கழித்து தெட்சிணாமூர்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுவரை தெட்சிணாமூர்த்தி ஒருகையில் விலங்குடன் தரையில் அமர்ந்து இருந்தார்.
தெட்சிணாமூர்த்திக்கு அதிமான படபடப்பு இருந்த காரணத்தினால் அவருக்கு இ.சி.ஜி எடுக்கப்பட்டது. மேலும் அவர் சர்க்கரை நோயாளி என்று கூறப்படுகிறது. அதுதொடர்பான சிகிச்சையும் அளிக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பின்னர் மீண்டும் தெட்சிணாமூர்த்தி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். Also see:
ஜெயராஜ், பென்னிக்ஸ், ராஜாசிங் ஆகியோரை தொடர்ந்து 4-வது நபராக தெட்சிணாமூர்த்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்தனர். ராஜாசிங் நலம் பெற்று மீண்டும் சிறைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக இன்று கோவில்பட்டி கிளைச்சிறையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், விசாரணைக் கைதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து சிறைக்காவலர்கள் இருசக்கர வாகனத்தில் தெட்சிணாமூர்த்தியை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அழைத்துச் சென்றனர். அங்கு கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டு இருந்ததால், சிறிது நேரம் கழித்து தெட்சிணாமூர்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுவரை தெட்சிணாமூர்த்தி ஒருகையில் விலங்குடன் தரையில் அமர்ந்து இருந்தார்.
தெட்சிணாமூர்த்திக்கு அதிமான படபடப்பு இருந்த காரணத்தினால் அவருக்கு இ.சி.ஜி எடுக்கப்பட்டது. மேலும் அவர் சர்க்கரை நோயாளி என்று கூறப்படுகிறது. அதுதொடர்பான சிகிச்சையும் அளிக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பின்னர் மீண்டும் தெட்சிணாமூர்த்தி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.