மக்கள் & வணிகர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு டிப்ஸ் கொடுக்கும் கோவில்பட்டி டி.எஸ்.பி!

மக்கள் & வணிகர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு டிப்ஸ் கொடுக்கும் கோவில்பட்டி டி.எஸ்.பி!

கோவில்பட்டி டி.எஸ்.பி

தினந்தோறும் டி.எஸ்.பி.யின் இந்த நடவடிக்கையின் காரணமாக வணிகர்கள் முழு பாதுகாப்புவுடன் வியாபாரம் செய்வது மட்டுமின்றி பொது மக்களும் சமூக இடைவெளி விட்டு பொருள்கள் வாங்கி செல்கின்றனர்.

  • Share this:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் வாங்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் மக்களுக்கு கோவிபட்டி டி.எஸ்.பி கொரோனா குறித்த விழிப்புணர்வு டிப்ஸ் கொடுத்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மக்கள் கூட்டத்தினை குறைக்கும் வகையிலும், சமூக இடைவெளி விட்டு மக்கள் பொருள்கள் வாங்குதற்காக 3 இடங்களில் தற்காலிகமாக மார்க்கெட் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவில்பட்டி காவல்துறை டி.எஸ்.பியாக இருக்கும் ஜெபராஜ் தினந்தோறும் 3 மார்க்கெட் பகுதிகளுக்கு சென்று கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பாடம் நடத்தி வருகிறார்.

காலையில் வியாபாரிகள் வியாபாரம் தொடங்குவதற்கு முன்பு செல்லும் டி.எஸ்.பி.ஜெபராஜ், வியாபாரிகள் முககவசம், கையுறை ஆகியவை அணிந்து உள்ளார்களா என்று ஆய்வு செய்த பின்னரே வணிகம் செய்ய அனுமதிக்கிறார்.

தொடர்ந்து மார்க்கெட்டிற்கு மக்கள் காய்கள் வாங்க வரும்போதும் மைக்கில் இன்றைய கொரோனா தாக்கத்தின் நிலை குறித்தும், வணிகர்கள், பொது மக்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள் குறித்தும் எடுத்துரைக்கிறார். மேலும் ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் சேர்வு அடையமால் உற்சாகமாக கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு டிப்ஸ்களையும் சொல்லி அசத்தி வருகிறார்.

தினந்தோறும் டி.எஸ்.பி.யின் இந்த நடவடிக்கையின் காரணமாக வணிகர்கள் முழு பாதுகாப்புவுடன் வியாபாரம் செய்வது மட்டுமின்றி பொது மக்களும் சமூக இடைவெளி விட்டு பொருள்கள் வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமன்றி டி.எஸ்.பி.யின் டிப்ஸ்கள் பயனுள்ளதாக இருப்பதாக கூறுகின்றனர்.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published: