• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தடியடி மட்டுமல்ல.. ’முடி’யும் வெட்டுவோம்..! அசத்திய கோவை காவல் துறை

தடியடி மட்டுமல்ல.. ’முடி’யும் வெட்டுவோம்..! அசத்திய கோவை காவல் துறை

காவலர்கள் மனநோயாளிகளை அரவணைத்து காப்பகத்தில் சேர்த்து வருவது பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

  • Share this:
கொரோனாவிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் பணியில் கோவை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கை மாநகர காவல் துறை தீவிரமாகச் செயல்படுத்தி வரும் நிலையில்,  கொரோனா பாதிப்பிற்கு மனநலம் பாதிக்கபட்டவர்கள்  சிக்கிவிடக்கூடாது என்பதற்காக அவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கோவையில் இந்த 144 தடையை மீறி சாலையில் சுற்றியவர்கள் மீது  காவல்துறையினர் தடியடி நடத்தினர். இது சமூக வலைதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் பேசுபொருளானது. இந்நிலையில், முதல்வர் அறிவுரையை தொடர்ந்து 144 உத்தரவை மீறும் பொது மக்கள் மீது கோவை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Also read: டெல்லியில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்ற பரிதாபம்

இந்நிலையில், 144 தடை உத்திரவை முன்னிட்டு கோவை நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் நகரில்  சுற்றித்திரியும் மனநோயாளிகளையும் ஆதரவற்றவர்களையும் பிடித்து அவர்களுக்கு முடிவெட்டி, குளிக்க வைத்து, வேறு ஆடை அணிவித்து,  உணவு கொடுத்து காப்பகங்களில் சேர்த்து வருகின்றனர்.

இரண்டு நாட்களாக காவல் துறையினர் இப்பணியை நேரடியாக மேற்கொண்டு வருகின்றனர். கௌரவம் பார்க்காமல் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு காவலர்கள் முடிவெட்டி, குளிக்க வைத்து காப்பகத்தில் சேர்த்து வருவது பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக காவல் துறையினர் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல் துறையினர் தங்களுக்கு கண்டிப்பை மட்டுமின்றி மனிதாபிமானத்தையும் காட்டத் தெரியும்  என்பதை நிரூபித்து வருகின்றனர்.

Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: