நில்லுன்னு சொன்னா கொரோனா நிக்குமா? : அஸ்வந்த் கியூட் விழிப்புணர்வு - வீடியோ

சூப்பர் டீலக்ஸ் , சுந்தர காண்டம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகர் அஸ்வந்த் கொரோனா தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நில்லுன்னு சொன்னா கொரோனா நிக்குமா? : அஸ்வந்த் கியூட் விழிப்புணர்வு - வீடியோ
நடிகர் அஸ்வந்த்
  • Share this:
நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக எப்படி கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என ஊடகங்களும், அரசுகளும், தனியார் அமைப்புகளும், திரைப் பிரபலங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், சூப்பர் டீலக்ஸ் , சுந்தர காண்டம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகர் அஸ்வந்த் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பள்ளி , கல்லூரிகள், அலுவலகங்கள் விடுமுறை விடுத்துள்ளது நமது பாதுகாப்பிற்காகத்தான். யாரும் பயப்பட தேவையில்லை. வெளியில் செல்லும் பொழுது மாஸ்க் அணிந்து செல்லுங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு வேளை குளித்தாலும் நன்று. நில் என கூறினால் கொரோனா நிக்குமா? கைகளை நன்கு கழுவுங்கள். கவலைப்பட்டால் எதுவும் நடக்காது. நமது பாதுகாப்பை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.


 


First published: March 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்