ஹோம் /நியூஸ் /கொரோனா /

முதல்வர் தொகுதியான கொளத்தூரில் சாலையோர மக்களின் பசி போக்கும் காவல்துறை ஆளிநர்களின் துணைவியார்கள்

முதல்வர் தொகுதியான கொளத்தூரில் சாலையோர மக்களின் பசி போக்கும் காவல்துறை ஆளிநர்களின் துணைவியார்கள்

முதல்வர் தொகுதியான கொளத்தூரில் சாலையோர மக்களின் பசி போக்கும் பெரும் பணியில் செம்பியம் காவல்துறை ஆளிநர்களின் துணைவியார்கள் ஒரு குழுவாக ஈடுபட்டு வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலையின் தீவிர பரவல் காரணமாக அனைத்து இடங்களிலும் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மே 10 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் முக்கிய தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

  தற்போது 24ஆம் தேதியிலிருந்து ஒரு வார காலத்திற்குத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பலதரப்பட்ட ஏழை மக்கள் கடுமையான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர்.

  குறிப்பாக நடுத்தர,தினசரி கூலித் தொழிலாளர்கள், ஆதரவற்ற மக்கள் மற்றும் சாலையோர மக்கள் தங்களது தினசரி வாழ்க்கையைச் சுமுகமாக நடத்த முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு செம்பியம் காவலர் குடியிருப்பை சேர்ந்த காவல்துறை ஆளிநர்களின் துணைவியார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி சமூக அக்கறையோடு தினமும் மதிய உணவாக சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில், முக கவசம் ஆகியவற்றை தேவை உள்ளவர்கள் இருக்கும் இடத்திற்கே நேரடியாக சென்று வழங்கி வருகின்றனர்.

  Also Read : குவைத்தில் இருந்து 190 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் இந்தியா வந்தது

  செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் துளசிமணி செம்பியம் சரக உதவி ஆணையர் வீரமணி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் இவர்களுக்கு பொருள் உதவியாக அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தினமும் உணவு சமைப்பது மட்டுமல்லாமல் பேக்கிங் செய்து ஏழை எளிய மக்களுக்குநேரில் சென்று வழங்கி வருகிறார்கள்.

  இவர்களுடன் பேருதவியாக செம்பியம் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் குமரவேல் உதவி ஆய்வாளர், ஜெயக்குமாரி, உஷா மகாலட்சுமி , கிரேசி, விக்டோரியா கிருஷ்டிபவுலின்

  ,பானு பொன்ரத்தினம், ஆகாஷ் அஸ்வின் ராஜ் ,கில்பர்ட், ஸ்னோலின்ஜோரா, நாகரத்தினம் அம்மா. ஜான் பிரிட்டோ நாதன்,வடிவேல் எஸ் ஆனந்தன்.என இந்த குழுக்களின் பெயர் நீள்கிறது.

  Also Read : பசியின் கேள்விக்கு பதிலாக மாறிய "திருநகர் பக்கம்" - எளியோரின் வயிறு நிறைக்கும் மதுரையின் மனிதநேயர்கள்

  கடந்த 10 நாட்களாக செம்பியம் பெரம்பூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் தினமும் 300 பேருக்கு மிகாமல் வீட்டிலேயே எளிய முறையில் உணவை சமைத்து அளித்து வருகிறார்கள். நாளொன்றுக்கு விதவிதமாக சாம்பார் சாதம் தக்காளி சாதம் லெமன் சாதம் புளி சாதம் என தினமும் ஒரு வகையானம் ஞாயிற்றுக்கிழமையில் சிக்கன் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளையும் வழங்கி வருகிறார்கள்.

  செய்தியளார் : கன்னியப்பன்

  Published by:Vijay R
  First published:

  Tags: CoronaVirus, Kolathur Constituency