சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, நீண்ட கால கொரோனா பாதிப்பை உருவாக்கும் நபர்களில் பெண்கள், 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கெனவே வேறு நீண்ட கால நோய் பாதிப்பு உள்ளவர்கள் அடங்குவர் என்பது தெரியவந்துள்ளது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமானது (CDC) ஒரு புதிய ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் நீண்ட கால கொரோனா நோய் பாதிப்புக்கு அதிக ஆபத்தில் உள்ளவர்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், பெண்கள் மற்றும் ஏற்கெனவே உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்குவர் என்று கூறியுள்ளது. மேலும், கொரோனா நோயின் பிந்தைய தீவிர விளைவுகள் என்று குறிப்பிடப்படும் நீண்ட கால கொரோனா நோய் என்பது கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படாதவர்களில் 5 சதவீதம் பேருக்கும் (asymptomatic அல்லது mild COVID-19 symptoms), கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் சுமார் 80 சதவீதம் பேருக்கும் ஏற்படும் என்று கருதப்படுகிறது.
அமெரிக்க சுகாதார அமைப்பில் உள்ள பல்வேறு கட்டமைப்பு மற்றும் சமூக பொருளாதார தடைகள் சில குழுக்களின் நீண்ட கால கொரோனா பாதிப்பு விகிதங்களுக்கு பங்களிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். நீண்ட கால கொரோனா பாதிப்பு மூலம் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றி மேலும் அறிந்து கொள்வதன் மூலம், ஆபத்து உள்ள மக்களுக்கு சிறந்த தடுப்பு மற்றும் சிகிச்சை உத்திகளை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
Must Read | இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் செய்வதால் இந்த பக்க விளைவுகள் எல்லாம் ஏற்படுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
தீவிரமான பிந்தைய கொரோனா நோய் விளைவுகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அடையாளம் காண்பது பொது சுகாதார வளங்களை ஒதுக்கீடு செய்ய வழிகாட்டவும், சுகாதார சமநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. அதே நேரத்தில், இக்குழுக்களும் கொரோனா தொற்றுநோயின் நீண்ட கால பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவார்கள் என்று ஆய்வு கூறுகிறது. லாங் பீச் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை (Long Beach Department of Health and Human Services) தலைமையிலான ஆய்வு இதற்கு மற்றொரு ஆதாரம் காட்டியுள்ளது. அதன்படி, 2020 ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 10 வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 366 பேரை ஆய்விற்கு எடுத்துக்கொண்டது.
கொரோனா சோதனை பாசிட்டிவ் என்று வந்தவுடன் குறைந்தது 2 மாதங்களுக்கு ஒருமுறை அந்த நோயாளிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 2 மாதங்களுக்குப் பிறகும் குறைந்தது ஒரு அறிகுறியையாவது கூறியிருந்துள்ளனர். சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் பரோஸ்மியா (வாசனை இழப்பு) ஆகியவை மிகவும் பொதுவான அறிகுறிகளாகும்.
அது மட்டுமின்றி, பெண்கள், 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கெனவே உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களிடம் அறிகுறிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததும் தெரியவந்தது. கொரோனா நோயிலிருந்து அதிகமான மக்கள் மீண்டு வருவதால், நீண்ட கால கொரோனா பாதிப்பை புரிந்துகொள்வதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் அதிக ஆராய்ச்சி தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், கொரோனா நோயில் இருந்து மீண்டவர்கள், அதற்கு பின் முறையான சிகிச்சை, சரியான உணவு, தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்களை செய்வது விரைவில் அதிலிருந்து மீள பெரும் உதவியாக இருக்கும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona impact, Covid-19, Explainer