முகப்பு /செய்தி /கொரோனா / Explainer | எது மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்? டெல்டாவா? டெல்டா பிளஸ் திரிபா?

Explainer | எது மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்? டெல்டாவா? டெல்டா பிளஸ் திரிபா?

இந்தியாவில் இரண்டாவது அலையின் தாக்கம் சரிந்த பிறகும், இன்னும் எண்ணிக்கைகள் வர டெல்டா திரிபு காரணியாக உள்ளதாக கருதப்படுகிறது.

இந்தியாவில் இரண்டாவது அலையின் தாக்கம் சரிந்த பிறகும், இன்னும் எண்ணிக்கைகள் வர டெல்டா திரிபு காரணியாக உள்ளதாக கருதப்படுகிறது.

இந்தியாவில் இரண்டாவது அலையின் தாக்கம் சரிந்த பிறகும், இன்னும் எண்ணிக்கைகள் வர டெல்டா திரிபு காரணியாக உள்ளதாக கருதப்படுகிறது.

  • Last Updated :

கொரோனா இரண்டாவது அலையின் போது, ​​கொரோனா வைரஸின் மோசமான பரவலால் இந்தியா ஸ்தம்பித்தது. இது முக்கியமாக, டெல்டா திரிபு எனும் வகையால் இரண்டாம் அலை ஏற்பட்டது. இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா திரிபு வைரஸ், கொரோனா முதல் அலையை விட பல மடங்கு வீரியமடைந்த தொற்று நோயாக கண்டறியப்பட்டது. இது தற்போது மிகவும் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாகும். உலகம் முழுவதும் கொரோனா டெல்டா வகையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. இந்தியாவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், மூன்றாவது அலை வர வாய்ப்புள்ளது, மேலும் புதிய டெல்டா பிளஸ் திரிபு நாட்டின் சில மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.

கொரோனா வைரஸின் டெல்டா திரிபு, பெரும்பாலும் தொற்று பரவக்கூடியதும், கடுமையானதும் என்று அறியப்பட்டுள்ளது. இது நாட்டின் பல பகுதிகளில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை பல மடங்கு அதிகரிக்கச் செய்தது. அதே நேரத்தில், இரண்டாவது அலையின் போது கண்டறியப்பட்ட பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கைகளின் போது டெல்டா பிளஸ் திரிபு, இரண்டு வகைகளில் இருந்து பிறழ்வுகளை (mutation) முன்னெடுத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது. இது முழுமையாக தடுப்பூசி போட்டவர்களை கூட பாதிக்கும், அது மட்டுமின்றி மரணத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனால் இரண்டில் எதில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? ஒன்று மற்றொன்றை விட வீரியமாக இருக்க முடியுமா? என்பது குறித்து பார்க்கலாம்.

டெல்டா vs டெல்டா பிளஸ் திரிபு: ஒப்பீடு

டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வகைகள் இரண்டும் வேரியண்ட்ஸ் ஆஃப் கன்சர்ன் (VoC) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அவை தற்போது பல நாடுகளில் பரவி வருகின்றன. டெல்டா திரிபு (B.1.617.2) தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும்; வேகமாக வளர்ந்து வரும் திரிபு உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தினாலும், இந்தியாவில் இரண்டாவது அலையின் போது எதிர்கொண்ட எண்ணிக்கைகள் மற்றும் பேரழிவுகளுக்கு இது பொறுப்பாகும். வைரஸின் இந்த மாறுபாட்டிற்கு மரபணு ரீதியாக கண்டறியப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கைகள் மட்டுமல்லாமல், இந்தியாவில் இரண்டாவது அலையின் தாக்கம் சரிந்த பிறகும், இன்னும் எண்ணிக்கைகள் வர டெல்டா திரிபு காரணியாக உள்ளதாக கருதப்படுகிறது. இதற்கிடையில், டெல்டா ப்ளஸ் திரிபு இந்தியாவின் மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டது. இது ஒரு வைரஸ் மாறுபாடாகும். இரண்டு கொரோனா வகைகளின் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது- பீட்டா (Beta) திரிபு (தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது) மற்றும் டெல்டா (Delta) திரிபு (இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது), டெல்டா பிளஸ் (Delta Plus) திரிபு என்பது L452R மற்றும் P871R என இரண்டு பிறழ்வுகளைக் கொண்டதாகும்.

Must Read | நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி- அமெரிக்கா முடிவு

எது வேகமாக பரவும் தன்மை கொண்டது?

இரு திரிபுகளையும் ஒப்பிடுகையில், டெல்டா பிளஸ் திரிபு டெல்டா வகையை விட கிட்டத்தட்ட 60 சதவீதம் வேகமாக பரவும் என்று கூறப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, டெல்டா பிளஸ், அதன் கடுமையான அம்சங்கள் மற்றும் வேகமாக பரவும் திறன் இருந்தபோதிலும், உண்மையில் அவை இப்போது வேகமாக பாதிப்பை தரவில்லை என்றும் கூறுகின்றனர்.

இரண்டு வகைகளின் அறிகுறிகள் என்னென்ன?

பெரும்பாலான அறிகுறிகள் டெல்டா திரிபைப் போலவே இருப்பதாக கூறப்பட்டாலும், கீழே பட்டியலிடப்பட்டுள்ளவை அறிகுறிகளாக இருக்கலாம்.

மூச்சுத் திணறல்

நீண்ட நாட்களாக தொடரும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல்

இரைப்பை குடல் பிரச்சனை

சருமத்தில் தடிப்புகள் மற்றும் ஒவ்வாமை

வறட்சி மற்றும் நீர் நிறைந்த கண்கள்

பசியின்மை மற்றும் குமட்டல்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தடுப்பூசி போட்டவர்களுக்கு எது அதிக அச்சுறுத்தலாக இருக்கும்?

டெல்டா பிளஸ் திரிபு தடுப்பூசி போடாதவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமல்லாமல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களையும் பல்வேறு விதங்களில் பாதிப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், அறிகுறிகளற்ற, லேசான அல்லது மிதமான தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்கள், அரிதாகவே மருத்துவமனையில் சேர்க்கும் அபாயம் உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

First published:

Tags: Covid-19, Delta Variants, Delta+ variant, Explainer, News On Instagram