கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்தாலும், அதனை யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம்? என்ற கேள்வி இன்னும் மக்களிடம் இருந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக,
கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்பதில் பலருக்கும் சந்தேகம் இருந்து வருகிறது.
பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அதன் மருந்துகள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் எனவும் செய்திகள் வெளியாகின. இது குறித்து கலிஃபோர்னியா மற்றும் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூட்டாக இணைந்து ஆய்வில் ஈடுபட்டனர்.
பாலூட்டும் தாய்மார்களிடம் இருந்து தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட 48 மணி நேரத்திற்கு பிறகும் பல்வேறு நேரங்களில் அவர்களிடம் இருந்து தாய்ப்பால் மாதிரிகளை பெற்று சோதனைக்குட்படுத்தினர். தாய்மார்கள் அனைவரும் எம்.ஆர்.என்.ஏ (mRNA) வகை தடுப்பூசிகளான பைசர் மற்றும் மாட்ரெனாவை செலுத்திக் கொண்டவர்களாக இருந்தனர். இந்த சோதனையின் முடிவில் தாய்ப்பாலில் கொரோனா தடுப்பூசி மருந்து கலப்பதில்லை என்பதை கண்டுபிடித்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை 7 தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் பெறப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
Also Read |
சியா விதைகளா? சப்ஜா விதைகளா?- உடல் எடையை எது விரைவாக குறைக்க உதவும்?
தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள் தடுப்பூசிகள் எடுத்துக் கொண்டால், அவை பாலின் வளத்தையும், குழந்தைகளையும் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால், உலகளவில் பச்சிளம் தாய்மார்கள் தடுப்பூசிகள் எடுத்துக் கொள்வதை தவிர்த்து வந்தனர். அரசு மற்றும் சுகாதார அமைப்புகளும் முதலில் கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் தாய்மார்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினர். போதுமான ஆய்வு முடிவுகள் கிடைக்க பெறாததால், அதுவரை பச்சிளம் தாய்மார்கள் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
ஆனால், உலக சுகாதார அமைப்பு, பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியது. அக்காடமி ஆப் பிரீஸ்ட்பீடிங் மெடிசன் (Academy of Breastfeeding Medicine) வெளியிட்ட தகவலில், எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி எடுத்துக் கொண்டால் மார்பக திசுக்களை சிறிய அளவில் பாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. இதன் மூலம் குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், கலிஃபோர்னியா மற்றும் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு, மக்களிடையே இருக்கும் சந்தேகங்களை போக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்து பேசிய பேராசிரியர் ஸ்டெபைன் எல்.காவ், பாலூட்டும் தாய்மார்களுக்கு எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானது. அவர்கள் இந்த தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டால் தாய்ப்பால் பாதிக்காது எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு குறித்து விளக்கியுள்ள ஆய்வாளர்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறித்து மிக மிக சிறிய அளவிலான சோதனை மட்டுமே நடத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். விரிவான அல்லது மிகப்பெரிய அளவில் மாதிரிகள் பெறப்பட்டு, அவற்றை சோதனைக்குட்படுத்தும்போது மட்டுமே முழுமையான முடிவுக்கு வர முடியும் என்றும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.