Home /News /coronavirus-latest-news /

கொரோனா தடுப்பூசிக்கு தயாராகும் இந்தியா.. தடுப்பு மருந்துக்கான ரிஜிஸ்ட்ரேஷன் மற்றும் விலைகுறித்த விவரங்கள் இதோ..

கொரோனா தடுப்பூசிக்கு தயாராகும் இந்தியா.. தடுப்பு மருந்துக்கான ரிஜிஸ்ட்ரேஷன் மற்றும் விலைகுறித்த விவரங்கள் இதோ..

கோவிஷீல்ட் தடுப்பு மருந்து

கோவிஷீல்ட் தடுப்பு மருந்து

நாட்டில் COVID-19 தடுப்பூசிக்கான கண்காணிப்பை எளிதாக்க மற்றும் ரிஜிஸ்ட்ரேஷனை உறுதிப்படுத்த அரசு இத்தகைய ஆப்ஸை உருவாக்கியுள்ளது. 

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
கொரோனா வைரஸுக்கு எதிராக நாட்டில் ரெஸ்ட்ரிக்டட் எமெர்ஜென்சி யூஸிற்க்காக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் (Covishield and Covaxin) ஆகிய இரண்டு கோவிட் -19 தடுப்பூசிகளை (Covid-19 vaccines) இந்தியா அனுமதித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India (SII)) ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியான (Oxford-AstraZeneca's vaccine) கோவிஷீல்டை (Covishield) தயாரித்துள்ளது. 

இதற்கிடையில், கோவாக்சின் (Covaxin) ஐதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Bharat Biotech and Indian Council of Medical Research (ICMR)) இணைந்து உருவாக்கியுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிடமிருந்து (SII) 1.1 கோடி டோஸுக்கும், பாரத் பயோடெக்கிடமிருந்து 55 லட்சம் டோஸுக்கும் கடந்த திங்களன்று மத்திய அரசு கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. 

அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில், சுமார் 30 கோடி கொரோனாவால் அதிக ஆபத்து உள்ளவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வார்கள் என்று அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். வேக்சினேஷன் டிரைவ் (Vaccination Drive) ஜனவரி 16ம் தேதி தொடங்கும் நிலையில், இந்த இரண்டு தடுப்பூசிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இங்கே காண்போம்., 

டிரைவ் மற்றும் வேக்சினேஷனுக்கான கட்டங்கள் (DRIVE AND PHASES OF VACCINATION):

இந்தியா தனது  டிரைவை (Vaccination Drive) ஜனவரி 16 முதல் தொடங்குகிறது, இந்த ட்ரைவில் கிட்டத்தட்ட 3 கோடி சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு (healthcare and frontline workers) முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது. COVID-19 Vaccine Operational Guidelinesன் படி, இந்த ஷொட்ஸ்கள் முதலில் 1 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கும் சுமார் 2 கோடி முன்கள பணியாளர்களுக்கும் வழங்கப்படும், பின்னர் 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் ஷொட்ஸ்கள் வழங்கப்படும், அதன்பிறகு 50 வயதிற்கு குறைவான நபர்களுக்கு கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தின் அடிப்படையில் ஷாட்ஸ் உட்பட பிற மருந்துகளுடன் வழங்கப்படும்.

பதிவு (REGISTRATION) :

கடந்த ஆண்டு டிசம்பரில், குடிமக்களுக்கு தடுப்பூசிகளை விநியோகிப்பதற்கான ஏஜென்சிகளுக்கு உதவுவதற்காக Co-WIN ஆப்ஸை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக, இந்த தடுப்பூசி கிடைக்கவேண்டுமெனில் மக்கள் சுய பதிவு அதாவது செல்ப் ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய உதவும் வகையில் இந்த Co-WIN ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்ஸில் மொத்தம் ஐந்து தொகுதிகள் உள்ளன, அதாவது; நிர்வாகி தொகுதி, பதிவு தொகுதி, தடுப்பூசி தொகுதி, பயனாளி ஒப்புதல் தொகுதி, மற்றும் அறிக்கை தொகுதி (Administrator module, Registration module, Vaccination module, Beneficiary Acknowledgement module, and Report module).  

நாட்டில் COVID-19 தடுப்பூசிக்கான கண்காணிப்பை எளிதாக்க மற்றும் ரிஜிஸ்ட்ரேஷனை உறுதிப்படுத்த அரசு இத்தகைய ஆப்ஸை உருவாக்கியுள்ளது. 

இந்த மொபைல் ஆப்ஸ் eVIN (Electronic Vaccine Intelligence Network) என்ற மேம்படுத்தப்பட்ட பதிப்பிலும் கிடைக்கிறது. மேலும் இது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Google Play Store and Apple App Store) வழியாக இலவசமாக டவுன்லோட் செய்யக் கிடைக்கும், இருப்பினும் அதன் கிடைக்கும் விவரங்கள் தெளிவாக இல்லை. KaiOSல் இயங்கும் Jio போன்களிலும் இந்த ஆப்ஸ் தொடங்கப்படலாம்.

டோஸ் (DOSE):

COVID-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் (DOSE) 28 நாட்கள் இடைவெளியில் செக் செய்யப்படும், மேலும் தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கப்பட்ட 14 நாட்களுக்குப் பிறகு ஒரு பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வகிக்கப்பட வேண்டிய தடுப்பூசியின் செயல்திறன் 14 நாட்களுக்குப் பிறகு தான் தெரிகிறது. ஆகையால் இரண்டு டோஸ்களுக்கு இடையில் 28 நாட்கள் இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

விலை என்ன? (PRICE):

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட் (Oxford-AstraZeneca's Covishield) தடுப்பூசியின் விலை ஒரு ஷாட்டுக்கு ரூ.200 + GST ரூ.10 ஆகவும், மொத்தம் ரூ.120க்கு ஒரு ஷாட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. "முதல் 100 மில்லியன் டோஸ்களுக்கு ரூ.200 என்ற சிறப்பு விலையை, அரசு கோரிக்கை விடுத்தபின் அளித்துள்ளோம் என்று, "சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா (Adar Poonawalla) கூறினார். கோவாக்சினின் ஒவ்வொரு டோஸுக்கும் வரி உட்பட 309.5 ரூபாய் செலவாகும். வரி இல்லாமல் 295 ரூபாய் செலவாகும். இருப்பினும், 55 லட்சம் உறுதிப்படுத்தப்பட்ட கோவாக்சின் டோஸ்களில் 16.5 லட்சம் இலவசமாக இருக்கும் என்பதையும் அரசாங்கம் கூறியுள்ளது. இந்த முறையில் ஒவ்வொரு டோஸின் விலை ரூ.206க்கு கிடைக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்தடுத்து உள்ள பிற தடுப்பூசிகள் (OTHER VACCINES IN PIPELINE):

மேலும் நான்கு COVID-19 தடுப்பூசிகள் அடுத்தடுத்தநிலையில் உள்ளன, அவற்றின் உற்பத்தியாளர்கள் எமெர்ஜென்சி யூசேஜ்க்கான அங்கீகாரத்திற்கு மருந்துக் கட்டுப்பாட்டாளரை அணுகலாம் என்று சுகாதார அமைச்சகம் (Health Ministry) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் (Union Health Secretary Rajesh Bhushan), இந்தியாவில் மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அடுத்தசுத்தநிலையில் ஜைடஸ் காடிலா, ஸ்பூட்னிக் V, பயோலஜி E மற்றும் ஜெனோவா (Zydus Cadila, Sputnik V, Biological E and Gennova) போன்ற தடுப்பூசிகள் இருக்கின்றன. 

ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech) ஒரு டோஸுக்கு ரூ .1,431க்கும், மாடர்னா (Moderna) ரூ .2,348 முதல் ரூ .2,715க்கும், சினோபார்ம் (Sinopharm) ஒரு டோஸுக்கு ரூ .5,650க்கும், சினோவாக் பயோடெக் (Sinovac Biotech) ஒரு டோஸுக்கு ரூ .1,027க்கும், நோவாவாக்ஸ் (Novavax) டோஸ் ரூ .1,114க்கும், கமலேயா சென்டர் (Gamaleya Centre) ஒரு டோஸுக்கு ரூ .734ஐ விட குறைந்தவிலையிலும் ஜான்சன் அண்ட் ஜான்சன் (Johnson and Johnson) ஒரு டோஸுக்கு 734  ரூபாய்க்கு தடுப்பூசிகளை வழங்க விலையை நிர்ணயித்துள்ளது.
Published by:Gunavathy
First published:

Tags: Astrazeneca, Covaxin, Covishield, Pfizer

அடுத்த செய்தி