கொரோனா வைரஸ் வடகொரியாவில் பரவாமால் தடுக்க வேண்டும் என்றும், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அதிபர் கிம் ஜாங் அன், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவுக்கு மிக அருகில் உள்ள வடகொரியாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. கொரோனா வைரஸ் பரவுவதால் அதிபர் பொது வெளியில் வருவதையே தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில், வைரஸ் பரவுவதை தடுக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மூத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, அந்நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளின் தூதரக அதிகாரிகளும் வீட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.