திருச்சி கல்லூரியில் படிக்கும் கேரள மாணவருக்கு கொரோனா அறிகுறி..!

திருச்சி கல்லூரியில் படிக்கும் கேரள மாணவருக்கு கொரோனா அறிகுறி..!
கோப்புப் படம்
  • Share this:
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவரருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில், அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் இது வரை 13 பேர் சிகிச்சை பெற்று, கொரோனோ வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் அண்மையில் சொந்த ஊரான கேரளா சென்று திரும்பியுள்ளார்.


தற்போது அவருக்கு சளி, காய்ச்சல் என கொரோனா அறிகுறி இருப்பதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை & கண்காணிப்பில் உள்ளார். அவரது ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதே போல், திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி ஒருவரும் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால் நலமுடன் இன்று வீட்டிற்கு சென்றார்.
First published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading