அதிகரிக்கும் பாதிப்பால் சமூகப் பரவல் அச்சம் - கேரளா எடுத்துள்ள புது உத்தி

சமூக தொற்றை எதிர் கொள்ள ஆன்டிபாடி அதிவிரைவு பரிசோதனைகள் தொடங்கியது கேரள மாநிலம்.

அதிகரிக்கும் பாதிப்பால் சமூகப் பரவல் அச்சம் - கேரளா எடுத்துள்ள புது உத்தி
கோப்புப்படம்
  • Share this:
வைரஸ் பெரும் தோற்று சமூக நிலையை எட்டி விட்டால் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டுத்தான் ஓயும். அந்த நிலைமையை கட்டுப்படுத்த இப்போது பின்பற்றும் உத்திகள் மட்டும் கை கொடுக்காது. எனவே கேரளத்தில் சமூக தொற்று நிலைமை ஏற்பட்டு விட்டதா? என்று உறுதி செய்யும் பணியில் கேரள அரசாங்கம் இறங்கிவிட்டது.

வைரஸ் பெரும் தொற்றின் முதல் அலையினை சரியாக கட்டுப்படுத்திய கேரளா, நாட்டிலேயே முதல் முறையாக துரித பரிசோதனைக்கு தயாரானது. ஆனால் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல் காரணமாக துரித பரிசோதனை கருவிகள் பயன்பாடு நிறுத்தப்பட்டது.

வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் காரணமாக வைரஸ் பெரும் தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியது.


4 பேர் மட்டுமே உயிரிழந்து, 600 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த கேரளத்தில், தற்போது மொத்தம் 1915  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சமூக பரவல் நிலை ஏற்பட்டு விட்டதா? என்ற அச்சம் கேரளத்தில் பரவலாக உருவாகி இருக்கிறது. அதற்கு ஏற்ப உத்திகளை வகுப்பதற்கு அரசு தயாராகி வருகிறது.

முதல் கட்டமாக 40,000 துரித பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. 14,000 துரித பரிசோதனை கருவிகளை பெற்று பரிசோதனைகளை தொடங்கியிருக்கிறார்கள். இந்த சோதனைகள் மருத்துவர்கள், செவிலியர்கள், வயது முதிர்ந்தோர், பொதுவானவர்கள் என பல்வேறு பிரிவினருக்கு மேற்கொள்ளப்பட உள்ளன.

ஆண்டி பாடி பரிசோதனை என்பது உடலில் வைரஸ் வந்து சென்றுள்ளதா என கண்டறியும் பரிசோதனையாகும். வைரஸ் உடலில் நுழைந்த பிறகு அதற்கு எதிராக உருவாகும் எதிர்ப்பு சக்தியை இது காட்டிக் கொடுக்கும். இதன் மூலம் ஒருவருக்கு காய்ச்சல் வந்து சென்றதை அறிய முடியும்.இது குறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், "இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நோய் பரவல் எவ்வளவு உள்ளது என கண்டறிய ஆண்டி பாடி பரிசோதனைகளை செய்ய வலியுறுத்துகிறது.

கேரளா இந்த முயற்சியை எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 ஆயிரம் பரிசோதனைகள் செய்ய போவதாக கூறியுள்ளார்கள். இதே போன்று தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்" என கூறினார்.

இந்தியாவில் 69 மாவட்டங்களில் 24000 பேரிடம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நோய் பரவலுக்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறது. அதில் தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணாமலை ஆகிய  மாவட்டங்களில் ஆண்டி பாடி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

Also read... உதவிக்கு ஆளின்றி ரோட்டில் கிடந்த டி.எம்.சவுந்தரராஜனின் தம்பிAlso see...
First published: June 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading