கொரோனா வைரஸ் பாதிப்பு: கேரளாவிலிருந்து வரும் பேருந்துகளில் விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் பாதிப்பு: கேரளாவிலிருந்து வரும் பேருந்துகளில் விழிப்புணர்வு
கொரோனா வைரஸ்
  • Share this:
கொரோனா வைரஸ் எதிரொலியாக கேரளாவில் இருந்து கோவை வரும் பேருந்துகளில், தமிழக சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் அச்சத்தால், தமிழகத்தில் உள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், நோய் அறிகுறி தென்பட்டவர்களுக்கு சிறப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கேரளாவில் 3 பேர், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையில், தமிழக - கேரள எல்லையான வாளையாறு பகுதியில், காய்ச்சல் மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கேரளாவில் இருந்து கோவை நோக்கி வரும் பேருந்துகளில் பயணிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


Also see:

 
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்