500க்கும் மேற்பட்ட கொரோனா பாதித்தவர்களை மருத்துவமனையில் சேர்த்த ஆட்டோ ஓட்டுநர்!

ஆட்டோ ஓட்டுநர் பிரேமசந்திரன்.

ஆட்டோவை மினி ஆம்புலன்ஸாக மாற்றி, கொரோனாவில் பாதித்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டுவருகிறார் ஆட்டோ ஓட்டுநர் பிரேமசந்திரன்.

  • Share this:
கொரோனாவின் இரண்டாவது அலையின் காரணமாக நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. நோய் தொற்று பாதிப்பு ஒருபுறம் இருக்க, மக்களின் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அரசாங்கம் பல்வேறு உதவிகளை செய்தாலும் அது போதுமானதாக இல்லை.

நாடு முழுவதும் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் தன்னார்வலர்கள் பலரும் களத்தில் இறங்கி தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். வீடிழந்து சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல், கப சுர குடிநீர் வழங்குதல், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது, மருத்துவமனைகளில் இடம் பெற்றுத் தருவது, ஆக்ஸிஜன் வசதிகளை ஏற்பாடு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் தன்னார்வலர் ஒருவர் தெரு நாய்களுக்கு பிரியாணி வழங்கிய செய்தி மிகவும் வைரலானது. ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியில் வராததால் நாய்களுக்கு உணவளிக்க ஆளில்லாமல் வாடிய நிலையில் அவர் தானாக முன்வந்து உணவு வழங்க முன் வந்திருக்கிறார்.

ALSO READ | ஸ்புட்னிக்-வி உற்பத்தி இந்தியாவில் தொடக்கம்: ஆண்டுக்கு10 கோடி டோஸ் தயாரிக்க இலக்கு!

இந்த மாதிரியான சம்பவங்கள் தான் மனிதம் இன்னும் சாகவில்லை என்ற உண்மையை மக்களுக்கு உணர்த்துகின்றன. இந்நிலையில் கேரளா மாநிலம் பய்யனூர் என்ற ஊரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர பிரேமசந்திரன். 51 வயதான இவர் 30 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

தற்போது தனது ஆட்டோவை மினி ஆம்புலன்ஸாக மாற்றி, கொரோனாவில் பாதித்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டுவருகிறார். வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கர்ப்பமான பெண் ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதனையடுத்து அவர் தனது ஆட்டோவில் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இது தான் அவர் இந்த சேவையை தொடங்க முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. அதன் பிறகே மற்ற கொரோனா பாதித்தவர்களையும் மருத்துவமனைகளில் சேர்த்திருக்கிறார். இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறாராம்.

 

  

ஒவ்வொரு முறையும் கொரோனா பாதித்தவர்களை மருத்துவமனையில் சேர்த்த பிறகு , தனது ஆட்டோவை சுத்தமாக கழுவி விடுவாராம். அந்த பகுதியில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறார். கொரோனா பிரச்சனைகளுக்கு முன்னரே மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தால் மக்கள் இவரைத் தான் அணுகுவார்களாம்.

ALSO READ | கோவிட் -19 சோதனைக்கு மறுத்த பெங்களூரு இளைஞர்.. கொடூரமாக தாக்கிய நகராட்சி ஊழியர்கள் - வெளியான அதிர்ச்சி வீடியோ

பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் கொரோனா பாதித்தவர்களை அழைத்து செல்வதில் தயக்கம் காட்டிய நிலையில் பிரேமசந்திரன் துணிந்து சென்று மக்களை மருத்துவமனைக்கு செல்கிறார். இதனையடுத்து அவரது செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அவருக்கு அப்பகுதி மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இவரை பற்றிய செய்தியை ஏஎன்ஐ பதிவு செய்திருந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: