• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • மக்களை வீடுகளுக்குள் முடக்க பேய் போல வேடமிட்ட இளைஞர்கள்: அச்சத்தில் வீடுகளுக்குள் தெறித்து ஓடிய மக்கள்..!

மக்களை வீடுகளுக்குள் முடக்க பேய் போல வேடமிட்ட இளைஞர்கள்: அச்சத்தில் வீடுகளுக்குள் தெறித்து ஓடிய மக்கள்..!

மக்களை வீடுகளுக்குள் முடக்க பேய் போல வேடமிட்ட  இளைஞர்கள்: அச்சத்தில் வீடுகளுக்கு தெறித்து ஓடும் மக்கள்

மக்களை வீடுகளுக்குள் முடக்க பேய் போல வேடமிட்ட  இளைஞர்கள்: அச்சத்தில் வீடுகளுக்கு தெறித்து ஓடும் மக்கள்

காவல்துறை எடுத்த ஊரடங்கு முயற்சிகளை விட, உள்ளூர் இளைஞர்கள் எடுத்த பேய் வேஷ முயற்சிக்கு கெபூ கிராமத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது.

  • Share this:
    ஊரடங்கை பின்பற்றாத மக்களை பயமுறுத்துவதற்கு, இந்தோனேஷியாவின் கெபூ கிராம மக்கள் பேய்களைப் போல் வேடமிட்டு ஊருக்குள் சுற்றி வருகின்றனர்.

    உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தோனேஷியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் சூழலில், பொதுமக்கள் சிலர் வீடுகளுக்குள் தங்காமல் வெளியே சுற்றி வருகின்றனர். இவர்களை பயமுறுத்துவதற்காக, கெபூ கிராம இளைஞர்கள் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர்.

    அதாவது முகம் முழுவதும் வெள்ளைப் பவுடர் பூசிக்கொண்டும், ஆவி போல வெள்ளை நிற ஆடைகளை சூடிக்கொண்டும் பயமுறுத்தி வருகின்றனர்.

    சாலையோரங்களில் ஜாலியாக அமர்ந்திருப்பவர்களுக்கு பின்னால் சென்று திடீரென்று பேய் போல் பயமுறுத்துவதால், அவர்கள் அலறியடித்து வீடுகளுக்கு ஓட்டம்பிடித்து வருகின்றனர்.

    காவல்துறை எடுத்த ஊரடங்கு முயற்சிகளை விட, உள்ளூர் இளைஞர்கள் எடுத்த பேய் வேஷ முயற்சிக்கு கெபூ கிராமத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது.

    Also see...











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: