ஜூன் மாதம் இறுதி வரை டெல்லிக்கு 15,000 படுக்கைகள் தேவைப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் மத்திய அரசின் கீழ் வரும் மருத்துவமனைகளில் வெளி மாநிலத்தவர்களுக்கும் அனுமதி உண்டு எனவும் உணவகங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநில எல்லைகள் நாளை முதல் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட 70% கொரோனா செஸ் வரி திரும்ப பெறப்படுவதாகவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, அரசு மருத்துவமனை தொடர்பான கெஜ்ரிவால் அறிவிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குமார் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.