நாடு முழுவதும் ஊரடங்கு: கீழடியில் நிறுத்தப்பட்ட அகழாய்வு

நாடு முழுவதும் ஊரடங்கு: கீழடியில் நிறுத்தப்பட்ட அகழாய்வு
கோப்புப்படம்.
  • Share this:
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால், கீழடியில் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக, தமிழக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.

தமிழர்களின் தொன்மையை உலகிற்கு பறைசாற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட இடங்களில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்றன.

இதில், கருப்பு, சிவப்பு நிறமுடைய பானைகள், தரதளத்தின் தொடர்ச்சி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா பெரும் தொற்று பரவலைத் தடுக்க, தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, அகழாய்வு செய்யப்பட்ட இடங்கள் அனைத்தும் யாரும் நுழைய முடியாத வகையில் மூடப்பட்டுள்ளது.


Also see:
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்