புதிய அபாயத்தை சந்திக்கிறோமா? இளம் கொரோனா நோயாளிகளுக்கு கவாசகி நோய் அறிகுறிகள் இருப்பதாக மும்பை மருத்துவர்கள் தகவல்

மும்பையில், 15 வயதுக்குட்பட்ட இளம் கொரோனா நோயாளிகளுக்கு கவாசகி நோயின் அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

புதிய அபாயத்தை சந்திக்கிறோமா? இளம் கொரோனா நோயாளிகளுக்கு கவாசகி நோய் அறிகுறிகள் இருப்பதாக மும்பை மருத்துவர்கள் தகவல்
கோப்பு படம்-கொரோனா
  • Share this:
மும்பையில், 15 வயதுக்குட்பட்ட இளம் கொரோனா நோயாளிகளுக்கு கவாசகி நோயின் அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

குழந்தைகளைத் தாக்கும் கவாசகி நோயின் அறிகுறிகளான மிக அதிகமான காய்ச்சல் மற்றும் உடல் தடிப்புகளுடன் வந்த 14 வயது நோயாளிக்கு, கொரோனாவும் கண்டறியப்பட்டதாக அம்மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின், குழந்தைகள் மற்றும் தொற்று நோய் சிறப்பு மருத்துவரான தனு சிங்காலும், கவாசகி அறிகுறிகளுடன் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா தொற்றுடன் நாடு போராடி வரும் நிலையில், கவாசகி அறிகுறிகளுடன் குழந்தைகள், இளம் வயதினர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவது அச்சத்தை அதிகரித்துள்ளது.28.06.2020 நிலவரப்படி, மதியம் 2 மணியளவில், 16,095 பேர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கிறது சுகாதார அமைச்சகத்தின் வலைதளமான MoHFW. 309712 பேர் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்திருப்பதாகவும், 203051 பேர் பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading