சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று

சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று
சிவகங்கை எம்.பி
  • Share this:
கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும் எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் அமித்ஷாவுக்கு கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்பட்ட்தால், அவருக்கு அண்மையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவு தற்போது வெளியாகியுள்ள நிலையில், அதில் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


 



 

தற்பொழுது, சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், லேசான அறிகுறி இருப்பதால் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading