படுக்கைகள், ஆக்சிஜன் பற்றாக்குறை... மருத்துவமனைகளுக்கு கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை

ஆக்சிஜன்

படுக்கைகள், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் எச்சரித்துள்ளார்.

  • Share this:
    படுக்கைகள், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் எச்சரித்துள்ளார்.

    கர்நடகா மாநிலம் பெங்களூரு உள்பட, மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பலவேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என, கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தீவிர கண்காணிப்பு பிரிவுகளில் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், மருத்துவமனைகளில் கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை மட்டுமே அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

    கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. அதையும் மீறி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

    Must Read : ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பதுக்கி விற்பனை செய்த நபர் கைது.. 48 சிலிண்டர்கள் பறிமுதல்

     

    கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட நாட்டின் 12 மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனது. அந்தவகையில், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி, சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், கேரளா, குஜராத், தமிழகம், ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: