முகப்பு /செய்தி /கொரோனா / கொரோனாவிலிருந்து மீண்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா வீடு திரும்பினார்

கொரோனாவிலிருந்து மீண்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா வீடு திரும்பினார்

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.

  • Last Updated :

77 வயதான எடியூரப்பாவுக்கு கடந்த 2ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர், பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையிலிருந்தே அவர் அலுவலக கோப்புகளையும் சரிபார்த்து வந்தார். இந்த நிலையில், எடியூரப்பா கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்திருப்பதாகவும், அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும் கர்நாடக முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

Also read... குவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

வீடு திரும்பினாலும் குறிப்பிட்ட காலம் வரை அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: CoronaVirus