கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் மகளுக்கும் கொரோனா உறுதி

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் மகளுக்கும் கொரோனா உறுதி
கர்நாடக முதல்வர் எடியூரப்பா மகளுக்கும் கொரோனா உறுதி
  • Share this:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் தீவிரமடைந்துவரும் நிலையில், நேற்று ஒரே நாளில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உத்தரப்பிரதேச அமைச்சர் மகேந்திர சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்நிலையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும் எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே தற்போது முதல்வர் எடியூரப்பாவின் மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவரும் சிகிச்சையை தொடங்கியுள்ளார்.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading