பார்க்க முடிந்தும் நெருங்க முடியவில்லை... கதறிய குழந்தை.. கண்ணீர் விட்ட தாய்... நன்றி கூறிய முதல்வர்...!

பார்க்க முடிந்தும் நெருங்க முடியவில்லை... கதறிய குழந்தை.. கண்ணீர் விட்ட தாய்... நன்றி கூறிய முதல்வர்...!
  • News18
  • Last Updated: April 8, 2020, 8:14 PM IST
  • Share this:
கொரோனா வார்டில் செவிலியராக பணியாற்றும் தாயை தூரத்தில் இருந்து பார்க்க முடிந்தும் நெருங்க முடியாத குழந்தை கதறி அழுதது பலரது நெஞ்சை உலுக்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் தங்களது முழு உழைப்பையும் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கொரோனா வார்டில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினரை நெருங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.


இந்த நிலையில், கர்நாடகாவில் நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பெலகாவி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் சுனந்தா, தற்போது கொரோனா வார்டில் பணியாற்றி வருகிறார்.  கடந்த சில வாரங்களாக அவர் வீட்டுக்கு செல்ல முடியவில்லை. இதனால், அவரின் 3 வயது மகள் தினமும் தாயைக் கேட்டு தந்தையிடம் அடம் பிடித்துள்ளார்.

இதனை அடுத்து, மகளை பைக்கில் சுனந்தா தங்கியுள்ள ஹோட்டலுக்கு அழைத்து வந்தார் கணவர். எனினும், தூரத்தில் இருந்தே அவர்கள் பார்க்க வேண்டிய நிலை என்பதால், “மம்மி... வா..” என்று அந்தக் குழந்தை கதறி அழுதது.மகளை அள்ளி அணைக்க முடியவில்லையே என்று சுனந்தாவும் கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சுனந்தாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

“நீங்கள் தற்போது பார்க்கும் சேவை மக்களுக்கு தேவைப்படுகிறது. அதற்காக உங்களுக்கு நன்றி, உங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று எடியூரப்பா சுனந்தாவிடம் கூறியுள்ளார்.

https://www.facebook.com/News18TamilNadu/videos/2842326375994192/
First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading