• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • பல்வேறு நிபந்தனைகளுடன் கர்நாடகாவில் மீண்டும் பேருந்து சேவைகள் தொடக்கம்

பல்வேறு நிபந்தனைகளுடன் கர்நாடகாவில் மீண்டும் பேருந்து சேவைகள் தொடக்கம்

கர்நாடகாவில் மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்

கர்நாடகாவில் மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்

கொரோனா அச்சம் காரணமாக அலுவலகம் செல்லும் பலர் பொதுப் போக்குவரத்தை தவிர்ப்பதாக கூறப்படுகிறது.

  • Share this:
    கர்நாடகாவில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், குறைந்த அளவிலேயே பொதுமக்கள் பயணித்தனர்.

    கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்து பேருந்து சேவை 55 நாட்களுக்குப் பிறகு, கர்நாடக மாநிலத்தில் மீண்டும் இன்று தொடங்கியுள்ளது. ஒரு பேருந்தில் அதிகபட்சம் 30 பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், நேற்று இயக்கப்பட்ட பேருந்துகளில் மிகவும் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணித்தனர்.

    இன்றும் பல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா அச்சம் காரணமாக அலுவலகம் செல்லும் பலர் பொதுப் போக்குவரத்தை தவிர்ப்பதாக கூறப்படுகிறது.

    பேருந்தில் பயண செய்ய கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: 

    • பஸ்ஸில் 30 பயணிகள் மட்டுமே இருக்க வேண்டும்.

    • பயணிகள் முகமூடி அணிவது கட்டாயமாகும்.

    • முகமூடி இல்லாமல் பஸ் ஏற முடியாது.

    • பேருந்தில் சமூக இடைவெளி கட்டாயமாகும்.

    • பயணிகள் பஸ் நிறுத்தங்களில் மட்டுமே ஏற வேண்டும்.

    • வெப்பத் திரையிடல் கட்டாயமாகும்.

    • மாநிலத்திற்குள் மட்டுமே பஸ் போக்குவரத்து.

    • ஏசி பஸ் போக்குவரத்து கிடையாது.

    • பயணிகள் அடையாள அட்டையுடன் வர அறிவுறுத்தப்படுகிறார்கள்


    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: