• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையில் இருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா: கன்னியாகுமரியில் மூடப்பட்ட காவல்நிலையம்

சென்னையில் இருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா: கன்னியாகுமரியில் மூடப்பட்ட காவல்நிலையம்

கன்னியாகுமரியில் மூடப்பட்ட காவல்நிலையம்

கன்னியாகுமரியில் மூடப்பட்ட காவல்நிலையம்

கன்னியாகுமரியில் ஏற்கனவே மாவட்டத்தில் ஐந்து பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உறுதி செய்யப்பட்ட ஆறு பேர் வசிக்கும் பகுதிகளை சேர்த்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

  • Share this:
    சென்னையில் இருந்து குமரி மாவட்டம் வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பெண்ணின் வீடு அருகே இருக்கும் தென் தாமரைகுளம் காவல்நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. அதேப்போல் அவர் சென்று வந்த தனியார் மருத்துவமனையும் தற்காலிகமாக மூடப்பட்டது.

    நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது இந்நிலையில் இதை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் இதுவரை 17 பேர் மட்டுமே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் இருக்கும் நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த 8 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது அதில் கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் காவல் நிலையம் அருகே வசிக்கும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்தாமரைகுளம் காவல் நிலையத்தை சாமிதோப்பு பகுதிக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்துள்ளனர்.

    அவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை சந்திக்க அங்கு சென்று வந்ததால் அந்த மருத்துவமனையும் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் ஆசாரிப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது வரை 6 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

    எனினும் மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் அதிகாரபூர்வமாக இதுவரையில் வெளியிடவில்லை. ஏற்கனவே மாவட்டத்தில் ஐந்து பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட ஆறு பேர் வசிக்கும் பகுதிகளை சேர்த்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    Also see...

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: