தென்னாப்பிரிக்கா அணி இருந்த அதே ஹோட்டலில் தங்கியிருந்த கனிகா கபூர் - அதிர்ச்சி தகவல்

தென்னாப்பிரிக்கா அணி இருந்த அதே ஹோட்டலில் தங்கியிருந்த கனிகா கபூர் - அதிர்ச்சி தகவல்
தென்னாப்பிரிக்கா அணி
  • Share this:
தென்னாப்பிரிக்கா அணி தங்கியிருந்த ஹோட்டலில் கனிகா கபூர் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாக டைம் ஆஃப் இந்தியா தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருந்தது. தர்மசாலாவில் நடைபெற இருந்த முதல் ஒரு நாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. அதை தொடர்ந்து 2வது ஒரு நாள் போட்டி லக்னோவில் நடைபெற இருந்தது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அந்த தொடரை பிசிசிஐ ரத்து செய்ததை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணியினர் நாடு திரும்பினார். லக்னோவில் தென்னாப்பிரிக்கா அணி தங்கியிருந்த அதே நட்சத்திர ஹோட்டலில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கனிகா கபூர் பங்கேற்றுள்ளார்.


கனிகா கபூர் அந்த நட்சத்திர ஹோட்டலில் பஃபே உணவு சாப்பிட்டதாகவும், லாஃபியில் பல விருந்தினர்களுடன் கலந்து கொண்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா தகவல் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளி கிழமை கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டது.

கனிகா கபூர் மார்ச் 11ம் தேதி முதல் லக்னோவில் பல முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். கனிகா கபூரின் பங்கேற்ற பார்டிகளில் எம்.பி மற்றம் எம்.எல்.ஏ-க்கள் சிலர் பங்கேற்றதால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணி தங்கியிருந்த ஹோட்டலில் அவர் சென்தால் அங்குள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
First published: March 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading