கொரோனா : கமல் எழுதி இயக்கியுள்ள ‘அறிவும் அன்பும்’ பாடல் உருவான விதம்

கமல்ஹாசன் உடன் இணைந்து அனிருத் , யுவன் ஷங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத், ஷங்கர் மஹாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த், லிடியன், ஆன்ட்ரியா, சித் ஸ்ரீராம், முகேன் ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.

கொரோனா : கமல் எழுதி இயக்கியுள்ள ‘அறிவும் அன்பும்’ பாடல் உருவான விதம்
அறிவும் அன்பும் பாடல் போஸ்டர்
  • Share this:
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கமல்ஹாசன் எழுதி இயக்கியுள்ள  ‘அறிவும் அன்பும்’ பாடல் நாளை வெளியாக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கு 77 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நாளூக்கு நாள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு பாடல்கள், வீடியோக்களை திரையுலக பிரபலங்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், ‘அறிவும் அன்பும்’ என்ற பாடலை எழுதி இயக்கியுள்ளார்.


தீம் மியூசிக் சார்பில் உருவாகியுள்ள அன்பும் அறிவும் பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் உடன் இணைந்து அனிருத் , யுவன் ஷங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத், ஷங்கர் மஹாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த், லிடியன், ஆன்ட்ரியா, சித் ஸ்ரீராம், முகேன் ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கு மஹேஷ் நாராயணன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இப்பாடல் ஏப்ரல் 23-ம் தேதி வியாழக்கிழமை(நாளை) திங்க் மியூசிக் நிறுவனத்தால் வெளியிடப்படவிருக்கின்றது. முதல் முறையாக ஜூம் செயலியின் மூலமாக ஊடக நண்பர்கள் முன்னிலையில் கமல் ஹாசனும் ஜிப்ரானும் இணைந்து இப்பாடலை வெளியிட உள்ளனர். மற்ற கலைஞர்கள் வீட்டில் இருந்தபடி இப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வர்.

“அறிவும் அன்பும்” என்கின்ற இப்பாடல் மூலம் அன்பு, நம்பிக்கை, அறிவு மற்றும் நல்லெண்ணங்கள் ஆகியவற்றை மக்களின் மனதிலும் இதயத்திலும் விதைக்கும் என்பதில் இருவேறு கருத்து இல்லை.இப்பாடலுக்கு இத்தனை பெரிய கலைஞர்களை ஒன்றிணைத்தது எப்படி என்று கமல்ஹாசனிடம் கேட்டதற்கு, “இது ஒரு உண்மையான ஜனநாயக முறைப்படி நடந்தது. நாங்கள் யாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க இயலாத காரணத்தினால் அவர் அவர் பாடும் பகுதிகளை தனியாக படம் பிடித்தனர். இப்படி அவர்களாகவே வீட்டில் இருந்தபடி படப்பிடிப்பு நடந்ததால் இப்பொழுது ஒளிப்பதிவு என்று யாருடைய பெயர் போடுவது என்று எங்களுக்கு தெரியவில்லை.

உச்சகட்ட தொழில்நுட்ப காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவரவர் எடுத்த காணொளிகளை எங்களுக்கு அனுப்பி வைக்க அதை நாங்கள் ஒன்றாக தொகுத்தோம். நான் பாடல் எழுதினேன், ஜிப்ரான் இசையமைத்தார், மற்ற பாடகர்கள் அனைவரும் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் இந்த நோக்கத்தினைப் புரிந்து உடனே பங்குபெற்றனர்.
இந்த கூட்டமைப்பு, எனது இனத்தின் பெருமையை இங்கு மட்டுமல்லாமல் இந்த உலகம் முழுக்க பறைசாற்றும்.

கலைஞர்கள் எப்பொழுதும் மக்களிடையே நம்பிக்கையை விதைப்பவர்கள். இப்பாடல் நம் அனைவருக்கும் மிகவும் கடினமான சூழலை கடக்கக்கூடிய வலிமையையும் வல்லமையையும் தரும் என்று உணர்த்தக் கூடியது. தக்கெனப்பிழைக்கும் என்பதை மீண்டும் நிரூபிக்கும் இப்பாடல்” என்று கமல்ஹாசன் கூறினார்.

அறிவும் அன்பும் பாடல் குறித்து ஜிப்ரான் கூறுகையில், கூட்டு முயற்சியால் எடுக்கப்பட்ட இப்பாடல், கண்டிப்பாக இது போன்ற கடினமான சூழலை வெற்றிபெற்று விடுவோம் என்ற நம்பிக்கையளிக்கிறது.

இந்த கொரோனோ தொற்று முடிந்த பின் வாழவிருக்கும் புதிய உல்கில் புதிய வாழ்க்கையை துவங்கவிருக்கும் நம் அனைவருக்கும் இப்பாடலை நான் சமர்பிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் இது கண்டிப்பாக பிடிக்கும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.
First published: April 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading