• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • மோடியின் அழைப்புக்கு ஆதரவு அளித்த கமல்ஹாசன்!

மோடியின் அழைப்புக்கு ஆதரவு அளித்த கமல்ஹாசன்!

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

  • Share this:
    பிரதமர் மோடி அழைப்புவிடுத்த மக்கள் ஊரடங்குக்கு நான் முழு ஆதரவு தருகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்று தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது அவர், ‘வரும் 22-ம் தேதி மக்கள் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை வீட்டிலிருந்து நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு நடத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.

    இந்தநிலையில், மோடியின் அறிவிப்புக்கு ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கு நான் முழு ஆதரவு அளித்து இணைந்து நிற்கிறேன். இது ஒரு அசாதாரண சூழ்நிலை. அதனால், நாம் அசாதாரண நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இது மிகப் பெரிய பேரழிவு.

     



    நம்மீது நடைபெற்றுள்ளது. ஒற்றுமையாக வீட்டுக்குள் இருந்தால் நாம் பாதுகாப்பாக இருக்கலாம். என்னுடைய நண்பர்கள், ரசிகர்கள், என்னுடைய மக்களையும் இந்த இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: