கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவர வேண்டும் என்றும் நோய்த்தாக்குதலுக்கு ஆட்படாதவர்கள் அலட்சியம் தவிர்க்க வேண்டும் என்றும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “கேரள முதல்வர் நண்பர்
பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். 4 நாட்கள் முன்புவரை தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தவர்கள்.
முன்னெச்சரிக்கைகளையும் மீறித் தாக்குகிறது
கொரோனா. இவர்கள் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப வாழ்த்துகிறேன். நோய்த்தாக்குதலுக்கு ஆட்படாதவர்கள் அலட்சியம் தவிர்க்க வேண்டும். ஆபத்தை உணரவேண்டும். நான் உள்பட” என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/ikamalhaasan/status/1380198704666210314?s=21
Must Read : தடுப்பூசி திருவிழா... : மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தல்
கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.