கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவுக்கு கொரோனா‌ தொற்று

கடந்து 2 தினங்களுக்கு முன்பு‌ சட்டமன்ற உறுப்பினர் பிரபு கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதன் ‌முடிவுகள் நேற்று மாலை வெளியானது.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவுக்கு கொரோனா‌ தொற்று
எம்.எல்.ஏ. பிரபு
  • News18
  • Last Updated: November 15, 2020, 10:08 AM IST
  • Share this:
கள்ளக்குறிச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பிரபுவிற்கு கொரோனா‌ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்து 2 தினங்களுக்கு முன்பு‌ சட்டமன்ற உறுப்பினர் பிரபு கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதன் ‌முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுவரை அமைச்சர்களில் உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு கொரோனா  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.


எம்எல்ஏக்கள் பரமக்குடி தொகுதி சதன் பிரபாகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பழனி, உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு, கோவை தெற்கு தொகுதி அம்மன் அர்ச்சுனன், தஞ்சை பேராவூரணி கோவிந்தராஜ், பூம்புகார் தொகுதி பவுன்ராஜ், வாசுதேவ நல்லூர் மனோகரன், சோழவந்தான் மாணிக்கம், திருச்சி மண்ணச்சநல்லூர் பரமேஸ்வரி, மதுரை மேற்கு தொகுதி சரவணன், புதுக்கோட்டை - கந்தர்வ கோட்டை ஆறுமுகம் ஆகியோர் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். அண்மையில் வேளாண்மைத்துறை அமைச்சர் கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தார்.

Also Read... கொரோனாவிலிருந்து மீண்டவர்களைக் கண்காணிக்க சிறப்பு கிளினிக் - ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு


திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ரிஷிவந்தியம் தொகுதி வசந்தம் கார்த்திகேயன், செய்யாறு தொகுதி ஆர்.டி. அரசு, செஞ்சி தொகுதி மஸ்தான், திட்டக்குடி சி.வெ.கணேசன், வேலூர் தொகுதி கார்த்கிக்கேயன், கிருஷ்ணகிரி தொகுதி செங்குட்டுவன், ராணிப்பேட்டை காந்தி, ராஜபாளையம் தங்க பாண்டியன், தூத்துக்குடி கீதா ஜீவன், நாகர்கோயில் சுரேஷ் ராஜன், ஒரத்தநாடு ராமச்சந்திரன், தஞ்சாவூர் நீலமேகம், பழனி தொகுதி செந்தில் குமார், குளித்தலை ராமர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காங்கிரஸ் - கன்னியாகுமரி கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ் குமார், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் உள்ளிட்டோர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் நியூஸ்18-ல் அறியுங்கள்
First published: November 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading